கோகுலாஷ்டமி -ஜன்மாஷ்டமி என்றெல்லாம் கொண்டாடப்படும் கிருஷ்ணனின் பிறந்த நாள்வைபவத்தில் அவர் அவதரித்த மதுராவில் – அவர் தவழ்ந்த கோகுலத்தில்- அவர் விளையாடிய பிருந்தாவனத்தில் நமது மனம் என்றென்றும் ஐக்கியம் செய்து கொள்ள விழைகிறது.
மதுரா- பிருந்தாவனில் கட்டப்பட்டுள்ள புதிய வண்ண வண்ணக் கலவையான ‘ப்ரேம் மந்திர்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணன் கோவில் – கிருபாள்ஜி அவர்களால் கட்டப்பட்டது. அந்த அழகிய அன்புக் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் ஓவியங்களும் நமது குவிகத்தை அலங்கரிக்கின்றன.