முதல் தமிழ் பேசும் படம் வெளியானது 31 அக்டோபர் 1931 ல் ( தீபாவளி ரிலீஸ்)
படத்தின் பெயர்: காளிதாஸ்
காளிதாஸ் பற்றிய சில தகவல்கள்:
ஹீரோயின் : டி.பி. ராஜலக்ஷ்மி
ஹீரோ: பி. ஜி. வெங்கடேசன்
இசை : பாஸ்கர தாஸ்
மற்ற நடிகர்: எல் வி பிரசாத்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் பேசி நடித்த படம். அதனால் விமர்சகர்கள் இதை முதல் தமிழ்ப் படம் என்பதை விட முதல் பல-மொழிப் படம் என்றே சொல்வார்கள்.
படப் பெட்டியை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து சினிமா தியேட்டர் வரை நூற்றுக்கணக்கான மக்கள் ரோஜா மலர் தூவி , ஊதுபத்தி கொளுத்தி, தேங்காய் உடைத்துக் கொண்டாடினார்களாம்.(அந்த பக்தி இன்னும் தொடர்கிறது)
8000 ரூபாயில் எடுத்த படம் 75000 கலெக்சன் கட்டியதாம்!
காளிதாஸ் படத்துடன் மக்கள் ரசனைக்காகக் குறத்தி நடனம் என்ற பிட்டும் போடப்பட்டதாம்!