தலையங்கம்

25/25

image11 

 பூ : ஒன்று                                                                      இதழ் : 11    

இந்தியா வல்லரசுப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு நிமித்தங்கள் -அறிகுறிகள் நிறையத் தென்படுகின்றன. 

மோடியின் அமெரிக்கப் பயணம் அதற்குக் கட்டியம் கூறுகிறது. மேடிசன் ஸ்கொயரில் அவர் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் ஜனரஞ்சகமாக  இருந்தது. 

 • பாரதத் தூய்மைத் திட்டம் ,
 • மேக் இன் இந்தியா திட்டம்,
 • வேண்டாத சட்டங்களை உடைத்து எறியும்  திட்டம்,
 • சீனாவுடன் நட்பு பாராட்டும் வகை,
 • பாகிஸ்தானின் ஊடுருவலுக்குப்   பதிலடி கொடுக்கும் திறன்,
 • வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வரத் திட்டம், 
 • ரெட் டேப்பை ஒழித்து ரெட் கார்ப்பெட் விரிக்கும் திட்டம்
 • மங்கள்யான் வெற்றி 
 • அண்டை நாட்டினருடன் நேசக்கரம் 
 • எல்லோருக்கும் வீடு 
 • கங்கையைப் புனிதமாக்கும் திட்டம் 
 • கிராம மேம்பாட்டுத் திட்டம் 
 • வேலை வாய்ப்புப்  பெருக்கும் திட்டம் 

இவை எல்லாம் செயலாற்றத் தொடங்கினால் இந்தியா சத்தியமாக வல்லரசு தான். 

அந்தக் கனவில் மிதக்காமல் அவற்றைச் செயலாக்கும் பணியில் ஈடுபடுவோம்.

வல்லரசு வானமாக இருக்கட்டும். ஆனால் அது  தொட்டு விடும் தூரம் தான்.  

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா