15/25
காத்தாடி ராமமூர்த்தியின் ‘இப்படிக்கு நந்தினி’ நாடகம் பார்க்க ஒரு நண்பர் என்னை வீடு தேடி வந்து காரில் அழைத்துப் போனார்.
நண்பரின் பரிவு.. நலம் தரும் உரையாடல்கள் ..இலக்கியச் சிந்தனைப் பகிர்வு- கார் பயணம்-நாரத கான சபா -இலவசக் காட்சி -நாடகம் முடிந்ததும் சென்னையில் பெரும் மழை – எல்லாமே நன்றாகத் தான் இருந்தான
ஆனால் நாடகம்???
சும்மா சொல்லக் கூடாது.. ..நாடகத்தின் ‘நாட்’ கொஞ்சம் வித்தியாசமானது தான்.
குழந்தை இல்லையே என்று தத்தெடுக்க அநாதை விடுதிக்குச் சென்ற இளம் தம்பதிகள் குழந்தைக்குப் பதிலாக அங்கே தங்கியிருக்கும் வயதான ஒருவரை அப்பாவாகத் தத்தெடுத்து வருகிறார்கள்.
புதுமை அங்கு ஆரம்பித்து அந்தக் கணமே முடிந்து விடுகிறது. அதற்கு முன்னும் பின்னும் வழக்கமான காத்தாடியின் காமெடித் தொல்லை தான்.
நடிப்பும், காட்சி அமைப்பும், மேடை அமைப்பும், வசனமும் நன்றாக இருந்தாலும் …………….
கதை வசனம் எஸ். எல். நாணு
நாடக ரசிகர்களை இழுக்க – காத்தாடிராமமூர்த்தி
சுவீகாரஅப்பாவாக நடித்து இயக்கியவர் – டி.டி. சுந்தரராஜன்