மங்கள்யான்

23/25

image

image

image

image

இந்தியா வெற்றிகரமாகச் செவ்வாய்ப்  பாதைக்கு ஏவுகலனை அனுப்பி அமெரிக்கா,ஐரோப்பா,ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்ததாகத் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. 

பிரதமர் மோடி கூறியதைப் போல இது தான் உலகிலேயே மிகவும் குறைவான செலவில் செவ்வாய்க்கு அனுப்பப் பட்ட ஏவுகலனாகும்.கிலோமீட்டர் கணக்குக்கு (Rs. 7/-)  ஆட்டோ கட்டணத்தை (Rs.10/-) விட குறைவான செலவில் செவ்வாய்க்கு சென்றிருக்கிறது நமது மங்கல்யான்.. (650 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை 4550 மில்லியன் ரூபாயில் கடந்தோம்) அடுத்தமுறை போகும் போது மீட்டருக்கு மேல துட்டு கேட்டாலும் கேட்கும். 

(இனிமேல் நாசா தனது அடுத்த ஏவுகலனை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் செய்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை)

Mass Orbiter Mission (MOM)  -மங்கள்யான் இந்தியாவின் பெருமைக்கு ஒரு புதிய மைல்கல்.