22/25
வியாழ பகவான் ! குரு பகவான் !
குருவில்லா கல்வி பாழ் !
குருவுக்கு குருவான குமரன் ஸ்வாமினாதன் !
குருவாய் அருள்பவன் குருவாயூர் கிருஷ்ணன் !
குருவின் உருவம் தக்ஷிணா மூர்த்தி
குருவின் திருவடியில் பணிவது குரு பக்தி !
குருவின் திருவருள் தருவது குரு சக்தி !
கருவிலே உயிர் பெற்று சேயாய் உருமாறி
தெருவிலே தவழ்ந்து வறுமையில் உழன்று
வெறுமெனத் தவிக்கும் மனித உயிர்க்கு
திருவென ஞானம் தருவது குருவே !
ஞானம் தேடி அலையும் உருவே
ஒவ்வொரு உருவும் குருவே !
பொறுமையைப் போதிக்கும் மண்ணும் குருவே !
வெறுப்பைப் போக்கும் குருவும் அதுவே !
இருட்டை ஒழிக்கும் தீயும் குருவே !
தீயதை எரிக்கும் குருவும் அதுவே !
தாகம் தீர்க்கும் நீரும் குருவே !
பாவம் தீர்க்கும் குருவும் அதுவே !
அளக்க முடியா வானும் குருவே !
விளக்க முடியா குருவும் அதுவே !
தென்றலாய்த் தாலாட்டும் காற்றும் குருவே !
புயலாய்ப் பீறிடும் குருவும் அதுவே !
சூட்டைக் கிளப்பும் ஆதி த்தன் முதல் குரு !
நிலவு சொல்வது காதல் பாடம்
காற்று செய்வது மேனி வருடல்
ஆகாயம் சொல்வது திறந்த மேனி
நெருப்பு தருவது கதகதப்பு
மழைத்துளி சொல்வது உயிர்த்துளி
பூமியும் சொல்வது காந்த ஈர்ப்பு
உச்சத்தை சொல்வது இடியின் மின்னல்
கடல் நதி சொல்வது வாழ்வின் துவக்கம்
பஞ்ச பூதம் சொல்வது வாழ்வின் பாடம் !!