EXIT REVIEW:
அர்ஜூன்: தலைவர் கலக்கல் தான்.. சும்மா லாஜிக் அது இதுன்னு பார்க்கக் கூடாது! ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் !அம்மாவுக்கும் பிடிக்கும்
அனன்யா: எனக்குப் பிடிச்சிருந்தது
IT Guy: ராத்திரி 1.30 மணி முதல் ஷோவுக்குப் போனேன்! பெரிய படம்! பெரிய ஏமாற்றம்!
ஸ்ரீராம்: தேவையில்லாம நிறைய இழுத்திருக்கிறார்கள்! நீளத்தைக் குறைச்சிருக்கணும் ! ரெண்டு ரஜினி தேவையே இல்லை! பாட்டுகள் எல்லாம் தேவைல்லாத இடத்தில வருது! சந்தானம் பாஷையில சொல்லப்போனா ‘பினிஷிங் குமாரின் பினிஷிங் சரியில்லை! பாக்கணும்னு அவசியம் இல்லே!
NK : படையப்பாவை சில இடங்களில் ஞாபகப் படுத்துகிறது. சோனாக்ஷி ஆச்சரியமாக நன்றாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் சுமார் ரகம். பாதிக்குப்பின் கொஞ்சம் மோசம் .3 ½ மணி நேரப் படமாக இருந்தாலும் எல்லோரையும் பார்க்க வைக்கும்!ஒரு தடவை பார்க்கலாம்.
சங்கர்: படம் பெரிசு. இருந்தாலும் போராடிக்கல! ரஜினி வித்தியாசமான கதையில நடிக்கணும் !இனிமே ரஜினி இந்தமாதிரி நடிச்சா ஓடறது சந்தேகம் தான்
அமெரிக்காவில் உள்ள தெலுங்கு நண்பர் : லிங்காவுக்கு அப்புறம் யாராவது தெலுங்கு ஹீரோவையோ தெலுங்கு படத்தையோ கிண்டல் அடிச்சிங்கன்னா அவங்களை அமெரிக்காவை விட்டே தொரத்திடுவோம்!
பக்கம் 6/25