தலையங்கம்

image

image

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்.. 

2014 போய் 2015 வந்துவிட்டது. காலண்டர் மாறிவிட்டது.
அந்த மாற்றம் நமது வாழ்விலும் வரவேண்டும்!

நமது உடலின் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கும். இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை இறந்து விடும்.

மாற்றம் என்பது தேவையான ஒன்று. மாற மறுப்பவர்கள் மரிக்க வேண்டும். இது தான் இயற்கையின் நிதி.

மாற்றம் என்பது எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.

உங்கள் மாற்றம் (x  ) உங்களுக்கோ மற்றவருக்கோ தீமை விளைவிக்கும் என்றால் அதற்கான எதிர்  மாற்றமும் பல மடங்கு பெரியதாக (-10 x ) உருவாகும்.விளைவு எதிர்மறை -9 x. இந்த நெகடிவ் மாற்றங்களால் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு அநியாயம் ஆக்கிரமிப்பு போர் எல்லாம் தோன்றுகின்றன. .

அதற்குப் பதிலாக உங்கள் மாற்றம் .(x ) உலகுக்கு நன்மை தருவதாக இருந்தால் அதற்கான எதிர் மாற்றம் (- .0.1 x.  ) சிறிய அளவு இருக்கும் விளைவு + 0.99 x . இந்த பாசிடிவ் மாற்றங்கள் உலகுக்கு  அமைதி, இன்பம்,  மகிழ்ச்சி,   முன்னேற்றம், பெருமை எல்லாம் தருகின்றன. 

ஆகமே நாம் பாசிடிவ்  ஆக மாற முயலுவோம்.

அதன் முதற் படி தான் புத்தாண்டு தீர்மானங்கள்! 

தீர்மானியுங்கள்!

image

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன் 

துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன் 
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா 
கிராபிக்ஸ் : அனன்யா 

(மாறும் கண்ணோட்டம் – சுழலும் கண்ணாடி -நன்றி TUMBLR)

பக்கம்  2/25