வாலண்டைன் தின ஸ்பெஷல் – ஒரு காதல் கானா
பாடலைக் கேட்க மேலே கிளிக் செய்யவும்

காலேஜ் வாசல் டீ கடையில நின்னு
காத்துக் கெடந்து தினமும் தின்னு பன்னு
காதல் வந்து மனசு எல்லாம் மண்ணு
ஒரு லுக் விட மாட்டியா நீ கண்ணு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
போன மாதம் கிழமை வெள்ளி
பாத்து இருந்தேன் எந்தன் ஜோலி
தலை நெறைய வாசனை மல்லி
கடைக்கு வந்தா ஸ்கூட்டியை தள்ளி
அவ டயறு மட்டும் ஆக வில்லை பஞ்சர்
என் ஹார்ட் டியூபு வீக் ஆகி டார்ச்சர்
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
உன் அண்ணன்கிட்டே வாங்கி மொத்து
ஆக மாட்டேன் காதல் பரத்து
ஜெய்ப்பேன் நீ என் காதல் சொத்து
நான் சூரியவம்ஸம் சரத்து
அட வாங்கித் தாறேன் கோல்டு பேங்கிலு செயினு
வில் யு பி மை ஸ்வீட்டு வேலன்டைனு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு திரும்பிப் பாரம்மா
இல்லே நானும் தேடி போக வேணும் டாஸ்மாக் பாரம்மா
காலேஜ் வாசலில் காத்து கெடக்கும் ஆளு
என் ஹீரோ நீயி, நான்தான் உன்னோட கேர்ளு
அப்பன் கிட்டே வந்து பொண்ணு கேளு – நீ
தாலி கட்டு, பார்த்து முகூர்த்த நாளு
ராசாத்தி கண்ணு ராசாத்தி கண்ணு லவ்வு பண்ணிட்டேன்
என் ராசா உந்தன் வேலன்டைனு நானும் ஆகிட்டேன்