தமிழ் நாடு எவ்வளவு தொன்மையான -அறிவில் முதிர்ச்சி அடைந்த நாடாக 2000 – 3000 ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்து வந்தது என்பதற்கு அளவு இந்த அளவு கோல்.
நேரத்தை, காலத்தை, நிறுத்தலை, முகத்தலை, நீட்டலை , பரப்பை ,எண்களை, பின்னங்களை எவ்வளவு துல்லியமாக அளந்திருக்கிறார்கள் /அறிந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
அவர்கள் அளித்ததை நாம் அழித்து வருகிறோம்!

கால அளவு :
1 குழி = 6.66 மில்லி செகண்ட்ஸ் ( கார்த்திகை நட்சத்திரம் ஒரு முறை மின்னும் நேரம்)
10 குழிகள் = 1 மை ( கண் இமைக்கும் நேரம் ) =66.66 மில்லி செகண்ட்ஸ்
2 மை = 1 கை நொடி =0.125 செகண்ட்
2 கை நொடி = 1 மாத்திரை = 0.25 செகண்ட்
6 மை = 1 நொடி =0.40 செகண்ட்
2 மாத்திரை = 1 குரு =0.50 செகண்ட்
2 நொடி = 1 வினாடி = 0.80 செகண்ட் ( ஒரு இதயத் துடிப்பு)
2 ½ நொடி = 2 குரு = 1 உயிர் = 1 செகண்ட்
5 நொடி = 1 சணிகம் = 2 செகண்ட்
10 நொடி = 1 அணு = 4 செகண்ட்
6 அணு = 1 நாழிகை-வினாடி = 24 செகண்ட்
10 நாழிகை வினாடி = 1 கணம் = 4 நிமிடம்
6 கணம் = 1 நாழிகை = 24 நிமிடம்
10 நாழிகை = 4 சாமம் = 1 சிறு பொழுது = 4 மணி
6 சிறு பொழுது = 1 நாள் = 24 மணி
7 நாள் = 1 கிழமை (வாரம்)
15 நாட்கள் = 1 அழுவம் ( அரை மாதம்)
29.5 நாட்கள் = 1 திங்கள் (மாதம்)
2 திங்கள் = 1 பெரும் பொழுது ( காலம்)
6 பெரும் பொழுது = 1 ஆண்டு
64 ஆண்டு = 1 வட்டம்
4064 ஆண்டு = 1 ஊழி
சிறுபொழுது :
1. காலை : 6AM-10AM
2. நண்பகல் 10AM-2PM
3. ஏற்பாடு : 2PM-6PM
4. மாலை : 6PM-10PM
5. இடையாமம் 10PM-2AM
6. வைகறை 2AM-6AM
பெரும் பொழுது
இளவேனில்—————- சித்திரை & வைகாசி
முது வேனில் ———— ஆனி & ஆடி
கார் காலம் —————– ஆவணி & புரட்டாசி
குளிர் காலம்————— ஐப்பசி & கார்த்திகை
முன்பனிக் காலம்——– மார்கழி & தை
பின்பனிக் காலம்——– மாசி & பங்குனி

தங்கம் நிறுத்தல் அளவு
4 நெல் எடை = 1 குன்றிமணி எடை
2 குன்றிமணி எடை = 1 மஞ்சாடி அல்லது பணவிடை
5 பணவிடை = 1 கழஞ்சு
8 பணவிடை = 1 வராகன் எடை
4 கழஞ்சு = 1 கக்ஸு
4 கக்ஸு = 1 பலம்
1.5 கழஞ்சு = 1 பவுன் அல்லது சவரன் = 8 கிராம்
நிறுத்தல் அளவு
32 குன்றிமணி = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
1000 பலம் = 1 கா
6 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு =1 பாரம்

முகத்தல் அளவு
1 குணம் = மிகச் சிறிய அளவு
9 குணம் = 1 மும்மி
11 மும்மி = 1அணு
7 அணு = 1 இம்மி
7 இம்மி = 1 நெல்
7 நெல் = 1 சிட்டிகை (சிறிய அளவு )
360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உறி
2 உறி = 1 படி
8 படி = 1 மரக்கால் (குருணி)
96 படி = 1 கலம்
120 படி = 1 பொதி
2 மரக்கால் = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
5 மரக்கால் = 1 பாறை
80 பாறை =1 கரிசை
21 மரக்கால் = 1 கோட்டை
நீட்டல் அளவு
8 சிறு கடுகு = 1 எள்:
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல் (1.9444 cm )
12 விரல் = 1 சாண் (23.3333 cm )
2 சாண் = 1 முழம் (46.6666 cm )
2 முழம் = 1 கஜம்
2 கஜம் = 1 பாகம்
22 கஜம் = 1 சங்கிலி
220 கஜம் = 1 பர்லாங்
8 பர்லாங் = 1 மைல்
5 பர்லாங் = 1 கிலோ மீட்டர்
625 பாகம் = 1 காதம் = 1.167 கிலோ மீட்டர்
பரப்பளவு:
குழி = 576 சதுர அடி
காணி =100 குழி =132 சென்ட்
வேலி = 7 காணி
மரக்கால் விடைப்பாடு = 8 சென்ட் ( 8 படி நெல் விதைக்கத் தேவையான இடம்)
ஏக்கர் =: 100 சென்ட் = 12.5 மரக்கால் விடைப்பாடு
முழு எண்கள்
- 1= onRu ஒன்று
- 10= patthu பத்து
- 100= nooRu நூறு
- 1000= aayiram ஆயிரம்
- 10,000= pathaayiram பத்தாயிரம்
- 100,000= nooRaayiram நூறாயிரம்
- 1000,000= meiyiram மையிரம்
- 10^9= thoLLunn தொல்லுண்
- 10^12= eegiyam ஈகியம்
- 10^15= neLai நெளை
- 10^18= iLanji இளஞ்சி
- 10^20= veLLam வெள்ளம்
- 10^21= aambal ஆம்பல்
பின்னங்கள்
- 1= onRu ஒன்று
- ¾= mukkaal முக்கால்
- ½= arai அரை
- ¼= kaal கால்
- 1/5= naalumaa நாலுமா
- 3/16= moonRu veesam மூன்று வீசம்
- 3/20= moonRumaa மூன்று மா
- 1/8= araikkaal அரைக்கால்
- 1/10= irumaa இரு மா
- 1/16= maakaaNi (veesam) மாகாணி அல்லது வீசம்
- 1/20= orumaa ஒரு மா
- 3/64= mukkaal veesam முக்கால் வீசம்
- 3/80= mukkaaN முக்காண்
- 1/32= araiveesam அரை வீசம்
- 1/40 araimaa அரை மா
- 1/64= kaal veesam கால் வீசம்
- 1/80= kaaNi காணி
- 3/320= araikkaaNi munthiri அரைக்காணி முந்திரி
- 1/160= araikkaaNi அரைக்காணி
- 1/320= munthiri முந்திரி
- 1/102,400= keezh munthiri கீழ் முந்திரி
- ½,150,400= immi இம்மி
- 1/23,654,400= mummi மும்மி
- 1/165,580,800= aNu அணு
- 1/1,490,227,200= kuNam குணம்
- 1/7,451,136,000= pantham பந்தம்
- 1/44,706,816,000= paagam பாகம்
- 1/312,947,712,000= vintham விந்தம்
- 1/5,320,111,104,000= naagavintham நாகவிந்தம்
- 1/74,481,555,456,000= sinthai சிந்தை
- 1/1,489,631,109,120,000= kathirmunai கதிர்முனை
- 1/59,585,244,364,800,000= kuralvaLaippidi குரல்வளைப்பிடி
- 1/3,575,114,661,888,000,000= veLLam வெள்ளம்
- 1/357,511,466,188,800,000,000= nuNNmaNl நுண்மணி
- ½,323,824,530,227,200,000,000= thaertthugaL தேர்த்துகள்
நாணயம்
மிகச் சிறிய அளவு = 1 பால் (மர வட்டம் அல்லது கடல் கிளிஞ்சல்)
8 பாற்கள் = 1 செங்காணி
¼ செங்காணி = 1 கால்காணி ( செம்பு)
64 பாற்கள் : 1 காணாப்பொன் (காசு பணம்)
ஆங்கில அரசாங்கம் வந்த பிறகு
16 அணா = 1 ரூபாய்
1 அணா = 3 துட்டு
¼ அணா = ¾ துட்டு
புழக்கத்தில் இருந்த நாணயங்கள்
காலணா, அரையனா, ஒரு அணா, நாலணா, அரை ரூபாய், ரூபாய்
இத்தனை துல்லியம் எந்த மொழியிலாவது உண்டா? அணு தான் சிறியது என்று நினைத்தால் அதைவிட சிறிய அளவுகள் எத்தனை எத்தனை! பெருமைப் படுவோம் – நமது முன்னோர்களின் திறமையை நினைத்து !
பக்கம் – 13