என்னை  ஈர்த்திடும் அந்த இரண்டு!

image

ன்னை ஈர்த்திடும்அந்த இரண்டு – நல்ல  
பொன்னைப்பழித்து வருகுது உருண்டு
 
பொன்னையேஉருக்கிடும் அந்த இரண்டு – தினம்
என்னையே  மயக்கும் நெருப்பிடைத் துண்டு
 
மூடித் திறந்தஅந்த இரண்டு – எந்தன்
நாடி எகிறுது
அழகினைக் கண்டு
 
கருப்பு
வண்டினம் அந்த இரண்டு – என்னை
விருப்புடன்
அழைத்து மிரளுது மருண்டு
 
தனம் தனம்
என்ற அந்த இரண்டு – என்னை
தினம் தினம்
கொஞ்சி நெகிழ்ந்திடும் திரண்டு
 
இரும்பிடைக்
காந்தமோ அந்த இரண்டு – என்னை
துரும்பென
மாற்றி சுழலுது அரண்டு  
 
சிலையென
நிற்கும் அந்த இரண்டு – பெரும்
மலைதனில்
வெடித்திடும் நாட்டுவெடிக் குண்டு


கண்ணைப்
பறித்திடும் அந்த இரண்டு – -மணப்  
பெண்ணைப்
போல் நாணிக்  கோணுது மிரண்டு
 
கொள்ளை அடித்திடும்  அந்த இரண்டு –நல்ல
கொள்கைப்
பிடிப்பில் பொங்கிடும் வண்டு
 
சூரிய சந்திரனோ
அந்த இரண்டு – நல்ல
நேரிசை வெண்பாபோல்
அழகிய செண்டு
 
துள்ளிக்
குதிக்குது அந்த இரண்டு – என்னை
அள்ளிச்
சொருகிடும் பெருங்கடல் நண்டு
 
அகத்தைக்
காட்டிடும் அந்த இரண்டு – உன்
முகத்தின்
இருவிழிகள் தான்அந்த  இரண்டு !
 

அன்பு கொஞ்சும்  விழி இரண்டு
ஆசை காட்டும்  விழி இரண்டு
இன்ப மூட்டும் விழி இரண்டு
ஈகை  தரும் விழி இரண்டு
உண்மை பேசும் விழி இரண்டு
ஊஞ்சல் ஆடும் விழி இரண்டு
என்னை ஈர்க்கும் விழி இரண்டு
ஏக்கம் தரும் விழி இரண்டு
ஐயமில்லா விழி  இரண்டு
ஒற்றிக் கொள்ளும் விழி இரண்டு
ஓங்கார விழி இரண்டு
ஔவை கண்ட விழி இரண்டு
முருகா உனக்கு விழி
பன்னிரண்டு !

image