ஜெயகாந்தானுக்கு அஞ்சலி!

image

தமிழ் இலக்கிய வட்டத்தின் ஒரு பெரும் ஆரமாக விளங்கியவர் ஜெயகாந்தன் என்பதில் சந்தேகமேயில்லை! 

மீசை வைத்த பாரதியைப் போல் இவரும் மீசை முறுக்கும் எழுத்தாள்மையாளர். 

இவரது படைப்புகள் 

வாழ்க்கை அழைக்கிறது, கைவிலங்கு,யாருக்காக அழுதான், பிரும்ம உபதேசம் ,பிரளயம், கருணையினால் அல்ல, பாரிசுக்குப் போ , கோகிலா என்ன செய்துவிட்டாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெய ஜெய சங்கரா, கங்கை எங்கே போகிறாள், ஒரு குடும்பத்தில் நடக்கிறது, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, கரிக்கொடுக்கள், எங்கெங்கு காணிலும், மூங்கில் காட்டினிலே, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், ஊருக்கு நூறு பேர், ஒவ்வொரு கூரைக்கும் கீழே, பாட்டிமார்களும் பேத்திமார்களும், அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள், இந்த நேரத்தில் இவள், காத்திருக்க ஒருத்தி, காரு, ஆயுத பூசை, சுந்தர காண்டம், ஈஸ்வர் அல்லா தேரே  நாம் . ஓ அமெரிக்கா, இல்லாதவர்கள், இதய ராணிகளும் இஸ்பேட்டு ராஜாக்களும், காற்று வெளியினிலே, இன்னும் ஒரு பெண்ணின் கதை, ரிஷிமூலம், சினிமாவுக்குப் போன சித்தாள், உன்னைப்போல் ஒருவன், அற்புதம், 

பாரதி பாடம், இமயத்துக்கு அப்பால், கட்டுரைகள்  எழுதியவர். 

சில கதைகள் அருமையான திரைப்படங்களாகவும் வந்துள்ளன. 

மற்றும் எண்ணற்ற சிறுகதைகள்.அவற்றுள் முக்கியமானவை அக்கினிப் பிரவேசம். ஒரு பிடி சோறு. .எல்லா சிறுகதைகளிலும் தனது  தனி முத்திரையைப் பதித்தவர்.. 


பத்ம பூஷண், ஞானபீடம் ,சாகித்ய அகாடமி, மற்றும் பல உலக விருதுகள் பெற்றவர். 

ஜெயகாந்தனின் சுய சரிதைப் பாடலைக்  கேளுங்கள்! 

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ

வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ