வாலி

image

கண்ணதாசன் வரிகளுக்குக் கொஞ்சமும் இளைத்ததல்ல  என்று வாலி அவர்கள்  எழுதிய  நயம் மிக்க வரிகள்! வாலி என்றுமே வாலிப வாலி. எம்‌ஜி‌ஆருடன் அவரது புகைப் படத்தைப் பாருங்கள். 

இவற்றின் முதலடியையும் அமைந்த திரைப்படங்களையும் கண்டுபிடியுங்கள்! 

——————————————————————————————- 

1) 

பனி பெய்யும்  மாலையிலே பழமுதிர் சோலையிலே 

கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான் 

பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை 

வள்ளல் தான் ஆளவந்தான் பெண்மையை வாழ வைத்தான் 

2)

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி 

முல்லை மல்லிகை மெத்தையிட்டு  

தேன் குயில் கூட்டம் பண்பாடும் 

மான்குட்டிக் கேட்டுக் கண் மூடும்  -ம்ம் 

3)

பழரசத் தோட்டம் பனிமலர்க்கூட்டம் 

பாவை முகமல்லவா? 

அழகிய தோள்கள் பழகிய நாட்கள் 

ஆயிரம் சுகமல்லவா 

4)

வானில் விழும் வில்போல்
புருவம் கொண்டாள் – இளம் 

வயதுடையாள் இனிய பருவம்
கண்டாள் 

கூனல் பிறை நெற்றியில் குழலாட
-கொஞ்சம்

குளிர் முகத்தில்  நிலவின் நிழலாட 

மானின் இனம் கொடுத்த விழியாட
-அந்த

விழி வழி ஆசைகள் வழிந்தோட
 

5)

செக்கச் சிவந்தன விழிகள்
– கொஞ்சம் 

வெளுத்தன செந்நிற இதழ்கள் 

இமை பிரிந்தது உறக்கம்
-நெஞ்சில் 

எத்தனை எத்தனை மயக்கம் 

உன்னிடம் சொல்லிட நினைக்கும்
– மனம் 

உண்மையை மூடி மறைக்கும் 

6)

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா

மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா 

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று 

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை 

7)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் 

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் 

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் 

அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் 

(இன்னும் வரும்) 

image