மயிலையில் அறுபத்து மூவர் !

“புன்னாக  வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”  

image
image
image
image
image
image

அறுபத்து மூவர் விழா என்று அழைக்கப்படும் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் நடத்தும் பங்குனிப் பெருவிழா மாற்று விடையாற்றி காலை விழா இந்த ஆண்டும் வழக்கம் போல் கோலாகலத்துடன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றது. 

முக்கியமான நிகழ்ச்சிகள்  

 • கொடியேற்றம், 
 • அதிகார நந்தி காட்சி, 
 • திருத் தேர்  வடம்  பிடித்தல், 
 • வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சி ,
 • ஐந்திருமேனி திருவீதி உலா, 
 • மறையோதல், 
 • திருமுறையோதல் 
 • தேவாரப் பண்ணிசை 
 • சொற்பொழிவு, 
 • கலை நிகழ்ச்சிகள் கண் கொள்ளாக் காட்சிகள்! பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

சித்தர்களில் நம் மனத்தைத் தொட்டவர் பட்டினத்தார். 

அவரது ’ ஒரு மட மாது ’ என்ற தத்துவப் பாடல் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்தது. டி‌எம்‌எஸ் பாடிய அந்தப் பாடலைக் கேளுங்கள்!   (மேலே உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்) 


தாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடிய வெண்பா.

ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
யெப்பிறப்பிற்காண்பேனினி. 1

முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
வெரியத்தழன்மூட்டுவேன். 2

வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
விறகிலிட்டுத்தீமூட்டுவேன். 3

நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே – யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன். 4

அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
வரிசையிட்டுப்பாத்துமகிழாம – லுருசியுள்ள
தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
மானேயனவழைத்தவாய்க்கு. 5

அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் – மெள்ள
முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
மகனேயெனவழைத்தவாய்க்கு. 6

விருத்தம்.

முன்னையிட்டதீமுப்புரத்திலே
பின்னையிட்டதீதென்னிலங்கையி
லன்னையிட்டதீயடிவயிற்றிலே
யானுமிட்டதீமூள்கமூள்கவே. 7

வெண்பா.

வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
லாகுதேபாவியேனையகோ – மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
கருதிவளர்த்தெடுத்தகை. 8

வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
வந்தாளோவென்னைமறந்தாளோ – சந்ததமு
முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
றன்னையயீன்றெடுத்ததாய். 9

வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் – பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.

ஷேக்ஸ்பியர் சொன்னது போல “ If you have tears shed them now” 

மீனங்காடி

அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே

 

image

அடுத்து வந்தது ‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘ அணி !

 

“ நண்பர்களே ! எங்கள் நிகழ்ச்சி இன்னும்
பத்து நிமிடத்தில் ஆரம்பமாகும் .  அதுவரை
நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை,  பக்கத்தில் உள்ள கேண்டீனில் உங்களுக்கான காபி
தயாராக இருக்கிறது.  குடித்து விட்டுப்
பத்தே நிமிடத்தில் வாருங்கள் ! உங்களுக்குப் பல அதிசயமான செய்திகள் காத்துக்
கொண்டிருக்கின்றன “ என்று அந்தக் குழுவின் தலைவி
அறிவித்தாள்.  வேறு யாரும் அல்ல
சுஜாதா தான்.

 

எல்லோரும் திரும்பி வந்தபோது
அரங்கத்தில் ஐந்தாறு இடங்களில் வட்ட வட்டமாக நாற்காலிகள் போடப் பட்டிருந்தன .

 

“ நண்பர்களே ! இப்போது நீங்கள்
உங்களுக்குப் பிடித்த நாற்காலி வட்டத்தில் அமருங்கள்.  ஒவ்வொரு வட்டத்திலும் எங்கள் அணி ஆட்கள்
உங்களுக்கு உதவ இருப்பார்கள்.  உங்கள் வேலை
என்னவென்றால் இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு
என்னென்ன சேவை செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள் ! உங்கள் கருத்துக்களைத் தொகுத்து
நாங்கள் வழங்குவோம் ! அதற்கு முன்னால் …….
சில வினாடிகள் மௌனம்.

 

            ஒரு பயங்கரத்திற்குத் தயாராக
இருங்கள் !

கடந்த ஒரு மாதமாக நாங்கள் எடுத்த ‘
வாடிக்கையாளர் ‘ சர்வேயிலிருந்து, அவர்கள் நம்மைப்
பற்றிக் கூறிய கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம் ! எங்களைப் போல
உங்களில் பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கக் கூடும் !  தயாராயிருங்கள் ! மேடையிலிருந்து திரையில்
முதல் ‘ ஸ்லைடு ‘ வந்தது ! அனைவருக்கும் ‘ ஷாக் ‘ அடித்தது
போல் இருந்தது! அதற்கேற்றபடி அரங்கத்தில் இருட்டு ! அனைவருடைய பெருமூச்சும் பலமாக
ஒலித்தன !

 

image

 

                 வாடிக்கையாளர்
சர்வேயின் முடிவுகள்

 

முக்கியக் கருத்து ‘ ஸ்லைடிலும்
‘  பின்னணியில் சுஜாதாவின் குரலும்
தோன்றின.

 

“ நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடன்
வேலை செய்வதை கசப்பான அனுபவங்களாக உணருகிறார்கள் ! நம்மை அவர்கள்  ‘ தூக்கத்தில்
நடக்கும் பிராணிகள் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்!

“ சண்டை போடுபவர்களைக் கூடப் பொறுத்துக்
கொள்ளலாம் , ஆனால் இப்படி ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கும்பலை எப்படி
சகித்துக் கொள்வது ?  “ என்று
கேட்கிறார்கள்!.

 

“ நாம் நமது வேலையைச் செய்வது பற்றித்
தான் யோசிக்கிறோமே தவிர வாடிக்கையாளர் திருப்தியைப் பற்றிக் கவலைப்படுவதே
கிடையாது.  அவர்கள் சந்தோஷத்திற்காக ஒரு
துரும்பைக் கூட நாம் அசைப்பது இல்லை “

 

“ நாம் நமது வாடிக்கையாளர் அனைவரையும்
நமக்குத் தொந்தரவு தருபவர்களாக எண்ணுகிறோம்!

குறித்துக் கொள்ளுங்கள் ! இதெல்லாம்
அவர்களின் கருத்துக்கள் ! நம்மைப் பற்றி ! “

 

“ நாம் வாடிக்கையாளர்களை  ‘ இங்கே வா ! அங்கே
போ  ! என்று துரத்துகிறோமே தவிர அவர்களது
பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்பதில்லை “

 

மாலையில் – அதாவது ஆபீஸ் நேரம்
முடிவடைகையில் நாம் பஸ் பிடிப்பதற்காகப்  பிடிக்கும் ஓட்டத்தைப் பற்றி
வாடிக்கையாளர்கள் பலவிதமாக ‘ ஜோக் ‘ அடிக்கிறார்கள் ! நமது ‘ ஓட்டம்
திண்டாட்டம் ‘ அவர்களை வேதனையோடு சிரிக்க வைக்கிறது.

 

நமக்கு நம் கம்பெனியின் முன்னேற்றத்தில்
கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது அவர்கள் அபிப்பிராயம் ! நமக்கு மேலதிகாரிகளிடம்
பயம் இல்லை என்பது அவர்கள் கருத்து !

 

நாம் எப்பொழுதும் பழைய சட்ட
திட்டங்களைச் சொல்லுவதால் ஓட்டு மொத்தமாக நமக்கு அவர்கள் வைத்த பெயர் ‘ பழைய
பஞ்சாங்கம் ‘.

 

அவர்கள் நம் மேலதிகாரிகளிடம் கேட்க
விரும்பும் ஒரே கேள்வி ! ‘ ஏன் இந்த டிபார்ட்மெண்டை மூடக் கூடாது ?’  இந்த வேலையை மற்ற கம்பெனிக்கு ஏன் ‘ அவுட்
சோர்ஸ் ‘ செய்யக் கூடாது ?

image

சுஜாதா தொடர்ந்தாள்.  அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது. “ நம்மைப்
பற்றிய உண்மை சுடுகிறதல்லவா ?  
வாடிக்கையாளர்களுக்கு இப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது !  நாம் என்ன சாக்கு போக்கு சொன்னாலும் அவற்றை
அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.  நாம்
மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் !  இனியும் மாறவில்லை என்றால் அது தற்கொலைக்குச்
சமம் ! “

 

அடுத்து அதே அணியில் இருந்து இன்னொருவன்
தொடர்ந்தான் !

 

நமக்கு நமது கம்பெனியில் எவ்வளவு
முக்கியத்துவம் இருக்கிறது என்று நமக்குப் புரியவே இல்லை !  நமது செயல் மொத்தமாக கம்பெனியை எப்படிப்
பாதிக்கிறது என்பதையும் நாம் உணரவில்லை.
மற்ற டிபார்ட்மெண்ட் அனைவரும் நம்மைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் ! நல்ல
சேவையை அவர்கள் தருவதில் நாம் முட்டுக் கட்டையாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்
!

 

சுஜாதா மீண்டும் வந்தாள் !

 

“ இப்போது – இதன் பின்னணியில் உங்கள்
யோசனைகள் மிக மிக அத்தியாவசியமாகிறது !
இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசியுங்கள்.  உங்கள் அனைவரையும் நான்கு அணியாகப்
பிரிக்கிறோம் . இப்போது அந்த வட்ட நாற்காலிகளில் உட்கார்ந்து உங்கள்
யோசனைகளை ஒன்று சேருங்கள். பதினைந்து நிமிடத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் தங்கள்
கருத்துக்களைத் தெரிவியுங்கள்! இது தான் எங்கள் அணியின் தொகுப்பு“.

 

‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி ஆரம்பித்த உற்சாகம் அவர்களை இன்னும் ஒரு படி மேலே போக
வைத்தது.  மிகவும் சுறுசுறுப்பாகத் தங்கள்
வட்டங்களில் அமர்ந்து சுடச் சுட யோசனைகளைக் கூற ஆரம்பித்தார்கள்.!

 

கடைசியில் மீண்டும் சுஜாதா வந்தாள்.

image

“ இவ்வளவு யோசனைகள் வரும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை !  உங்கள் அனைவருக்கும்
எங்கள் நன்றி !  இந்த நான்கு அணிகளில்
நான்காவது அணி அங்கத்தினர்கள் அதிக அளவில் சிறப்பான யோசனைகளைச் சொல்லி
இருக்கிறார்கள்.  அந்த அணியில்
இருப்பவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.! அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புப்
பரிசு வழங்கப் படுகிறது. –  ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ அணியின் சார்பாக !

 

‘ ஹாய் ‘ என்று
கத்திக் கொண்டே அந்த நான்காவது அணி மேடைக்கு வந்தது. ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘என்ற வார்த்தை பொறித்த பெரிய உலோக பேட்ஜ் ஒவ்வொருவருக்கும்
சட்டையில் குத்தப்பட்டது. அதே வாசகம் பொறித்த சிறிய பேட்ஜ் மக்கள் அனைவருக்கும்
தரப்பட்டது.

 

பிறகு அவர்கள் கூறிய கருத்துக்களைத்
தொகுத்து வழங்கினர். முதலில் ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ இருப்பதால்
உண்டாகும் நன்மைகள்.

 

·        
நம்முடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக
இருக்கும் !

·        
நமது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம் தருவது நமக்கு
உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.!

·        
நாம் வேலை செய்வதன் பலன் நமக்குக் கிடைக்கும்.

·        
நமது முயற்சிகள் வாடிக்கையாளர் பிரச்சினைகளை மட்டுமல்ல நமது
பிரச்சினைகளையும் தீர்க்கும்.

·        
பொதுவாக நமது ஆரோக்கியம், சந்தோஷம், சக்தி
எல்லாம் அதிகரிக்கும்.

 

அது சரி ! ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ திட்டத்தை எப்படி கம்பெனியில் செயல் படுத்துவது ? இதோ
அதற்கான வழிகள் !

·        
நாம் ஆபீஸ் நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
மாற்றுவோம்.  வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக
இதை வரவேற்பார்கள்.  நமக்கும் இது
சௌகரியமாக இருக்கும். நம்மில் சிலர் சீக்கிரம் வந்து சீக்கிரம் செல்லலாம் .
மற்றவர் லேட்டாக வந்து லேட்டாகச் செல்லலாம்.!

·        
நமது  அலுவலகத்தில்
சில குழுக்கள் அமைத்து வாடிக்கையாளரின் தேவை என்ன ? எப்படி
சேவைகளை அதிகரிப்பது ? என்பதை ஆராய வேண்டும்.

·        
வாடிக்கையாளரின் கருத்துப்படி இந்த மாதம் சிறந்த சேவை
செய்பவர் என்ற விருது வழங்கலாம். அதே போல வருடத்திற்கான சிறந்த சேவைக்கான பரிசும்
தரலாம்.

·        
360 டிகிரி அளவில் வாடிக்கையாளர்,
தொழிலார்கள், மேலதிகாரிகள் அனைவரது கருத்துக் கணிப்பைப் பெற்று அவற்றை
தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் !

·        
வாடிக்கையாளர்களுக்கு திடீர் திடீர் என்று புதுவித சந்தோஷ
அலைகளைத் தருவதற்கென்றே ஒரு தனி படை அமைக்க வேண்டும்.

·        
முக்கிய வாடிக்கையாளர் வரும்போது அவர்களுக்கு நமது
அலுவலகத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும்.

·        
சில ஏர்லைன்ஸ் கம்பெனிகள் செய்வது போல நாமும் மனதைத்
திறந்து உண்மையான சேவை புரியத்
தயாராகுவோம்.!  நமது ஒவ்வொரு சேவையும்
சிறப்பானதாக அமைய வேண்டும் .! அமையும் !

image

 


மேரிக்கு பிரமிப்பாக இருந்தது. சுஜாதாவின் அணி இவ்வளவு தூரம் போக முடியும்
என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.
அப்படியே ஓரக் கண்ணால் டோனியைப் பார்த்தாள்.! அவன் சந்தோஷம் அவன் முகத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டியது.!


(தொடரும்) 

ADUTHTHA VEEDU – அடுத்த வீடு: அமராவதி

ஆந்திராவின் புதுத் தலைநகரின் பெயர் அமராவதி. இதைப் பற்றி அடுத்தவீடு பிளாக்கில் நண்பர் அருமையாக விளக்குகிறார். 

மேலே 

படித்து ஆனந்தமடையுங்கள்! 

அமராவதி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே சாதவாகனர்களின்  தலைநகரமாகத் திகழ்ந்தது! அதற்குப் பின்னும் முகலாயர் ஆட்சி வரும் வரை அது ஆந்திராவின் பெருமைமிகுந்த  நகரமாக விளங்கியது, 

 பகவான் புத்தர் இந்த இடத்திலிருந்து தான் தன் கால சக்கர உபன்யாசத்தை  அருளினார். 2006ல் தலாய்லாமா வந்து இந்தப் புனித  மண்ணை வணங்கினார். 

 ஆந்திராவின் படத்தைப் பாருங்கள் . ஒரு அழகிய வீணை போல காட்சி அளிக்கிறது.  அது மீட்டுமிடம் அமராவதி. தேவேந்திரனின் தலைநகரம் அமராவதிப் பட்டணம் போல இது மலர  வேண்டும் என்பது அனைவரது விருப்பம். 


image
image

.

ADUTHTHA VEEDU – அடுத்த வீடு: அமராவதி

கவிதைப் பூங்கா!

மதிப்புற்குரிய பேராசிரியர் திரு மா. வயித்தியலிங்கன்  அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் எழுதிய சிலேடை வெண்பா பற்றிக் குறிப்பிட்டார். 

அதைக் கேட்டு அவர் அனுமதியுடன் இங்கே தந்துள்ளேன்: 

மாணவருக்கும் பிரியாணிக்கும் உள்ள சிலேடை !  

image

மட்டனிதம் போடுகையால் மாண் குருமா ராசியினால் 

தொட்ட விரும்புகை தோய் மணத்தால் – திட்டமுற 

மாணாக்கர் என்றும் பிரியாணி ஆவார்கள் 

காணாக்கால் கண்டு கொள்ளப்பா!

மாணவர் : தினம் மட்டம் போடுவர் , குருமார் ஆசி  பெற்றவர்கள்,  புகை பிடிப்பதால் கையைத் தொட்டால் மணம் வீசும்,  

பிரியாணி: இதமான மட்டன்  போடுவது, குருமாவுடன் வருவது, சாப்பிட்ட கை மணம் வீசும் ,

 செல் போனைப் பற்றி அவருடைய இன்னொரு அருமையான வெண்பா!  

image

காது செவிடாகும் காசு பறிபோகும் 

வாதோடு வம்பு வளருமே – பேதாய்கேள் 

பொய்யே வளரும் பொழுது பழுதாகும் 

கையிலே செல்லிருந்தக்  கால்! 

இந்தக் கவிதைப் பூங்காவில் விவேக சிந்தாமணி என்ற பெயரில் வந்துள்ள சில கவிதைகளைத் தந்துள்ளேன்! படிப்பதற்கு சுலபமாகவும், மிகவும் பொருள்  பொதிந்ததாகவும், பஞ்ச் வரிகளுடன் கூடிய பாடல்கள் இவை! 

கிட்டத்தட்ட 135  பாடல்கள் கொண்ட இந்த விவேக சிந்தாமணியை எழுதிவர் யார் என்பதே தெரியவில்லை! 

ஆனால் அத்தனையும் முத்துக்கள்! 

பயனில்லாத ஏழு ஐட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்! 

image

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை  அடக்கா வேந்தன் குருமொழி  கொள்ளாச்  சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே!


அடுத்த பாடலைப் படியுங்கள்: 

image

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
 அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
 வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடமைக் கேட்க
  குருக்கள் வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கக்
 பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

மாடு கன்னு போட, மழை பெய்ய, மழையில் வீடு விழ , மனைவி நோய்வாய்ப்பட,  வேலைக்காரன் சாக, நிலத்தில் ஈரம் காயும் முன்னே விதைக்கலாம் என்று போகும் போது கடன்காரன் வழி மறிக்க, அரசாங்க வரிப் பணம் கேட்டு ஆள் வர,குருக்கள் வந்து தட்சிணை கேட்க, புலவர் ஒருவர் பாடிப் பரிசு கேட்க மனுஷன் பட்ட கஷ்டம் பார்க்க சகிக்காது!  

இது தான் சோதனை மேல்  சோதனை கேஸ் ! It never rains it pours என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒருத்தனுக்கு வரும் தொடர் துன்பங்களைப் பாருங்கள்!:


பெண்கள் மன்னிக்க!

image

ஆலகால விஷத்தையும் நம்பலாம்
  ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
கோலமத யானையை  நம்பலாம்
   கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம்
  கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை  நம்பினால்
  தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!


இந்தப்  பாட்டைப் படித்தால்   தூக்குத் தூக்கிப்  படத்தில் வரும்   “பெண்களை நம்பாதே "பாடல் ஞாபகம் வரும்!

திருவாசகத்  திருவிழா

image

மறைந்த திருவாசகமணி KM பாலசுப்ரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் அபாரப் புலமை படைத்தவர்.பல வருடங்களூக்கு முன்பே திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர். அந்த நூலின் பிரதிகள் தற்சமயம்  கிடைப்ப தில்லை.எனவே அதை மறுபதிப்பு செய்யவேண்டும் என்று                   “ சிவாலயம்” என்ற அமைப்பின் முன்னவர் எஸ் மோகன் செய்த முயற்சியின் விளைவே இந்த விழா!  

அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அறக்கட்டளையால் சிவாலயம் மற்றும் ராமலிங்க பணி மன்றமும் இணைந்து நடத்திய விழாவில்  பேசியவர்களின் பேச்சு திருவாசகத்தைப் போலவே உருக்கியது. 

ஓதுவாரின் திருவாசகப் பண் என்ன! 

குன்றக்குடி அடிகள், ஊரன் அடிகள், ஔவை நடராசன், செல்வகணபதி, சொ 

சொ மீ சுந்தரம் சங்கர நாராயணன் ,மாணிக்கம்,  வயித்தியலிங்கன் ஆகியோரின் சிறப்பான பேச்சு என்ன! . 

மனதில் பதிந்து, உருக்கி , கண்ணில் நீரை வரவழைத்தத் திருவிழா இது! 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர்  ஜி  யூ போப் அவர்கள்!  உலகத் தமிழ் மாநாட்டின் போது அவருக்குச் சென்னை மெரினாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது! அவரைப்  பற்றி  இந்த அவையில்

ஒரு கதை சொல்லப்பட்டது. 

image

இந்தியாவிற்கு கிறித்தவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்று வந்த பாதிரியார் அவர்.  திருவாசகத் தேனைப் பருகி இன்புற்ற அவர் ஹிந்து மத நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  உலக அளவில் பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இங்கிலாந்து திரும்பியதும்  அவர் மேல் ’அவர் உண்மையான கிறித்தவர் இல்லை’ என்று வழக்குப் போட்டார்களாம். 

தீர்ப்பு சொல்லவந்த நீதிபதி அவர் மொழிபெயர்த்த திருவாசகத்தைப் படித்துவிட்டு சொன்னாராம்

 ’ இவ்வளவு பெருமையான நூலைப் படித்துத் திளைத்து மொழிபெயர்த்தவர் திரும்பவும் இங்கிலாந்து வந்து கிறித்தவராகவே இருக்கிறார் என்றால் அவரை விட சிறந்த கிறித்தவர் இருக்கமுடியாது’  என்று.  

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தாராம்  ஜி.யு.போப்.

 • இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
 • தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
 • கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.

ஜி யூ போப் அவர்களுக்கு கரம் குவிப்போம்! சிரம் குவிப்போம்!