ஆறு  வீடும் பாழும் வீடு  – நாட்டுப்பாடல் (யாரோ)

image

ஒரு ஊரிலே இருந்த வீடு ஆறு வீடு 

ஆறு  வீடும் பாழும் வீடு 

அதிலொரு வீட்டுக்கு ஓலையில்ல 


ஓலையில்லா வீட்டில் தான் 

இருந்த பெண்கள் ஆறு பெண்கள் 

ஆறு பெண்கள் பாழும் பெண்கள் 

அதிலொரு பெண்ணுக்குக்  காதே  இல்ல


காதில்லாப் பெண்ணுக்குத் தான் 

செய்த கம்மல் ஆறு கம்மல் 

ஆறு கம்மலும் பாழும் கம்மல் 

அதிலொரு கம்மலுக்குக்

கல்லே இல்ல 


கல்லில்லாக் கம்மலைத் தான் 

செய்த தட்டான் ஆறு தட்டான் 

ஆறு தட்டானும் பாழும் தட்டான் 

அதிலொரு தட்டானுக்குக்

கையே இல்ல 


கையில்லாத  தட்டானுக்கு  

கொடுத்த பணம் ஆறு பணம் 

ஆறு பணமும் பாழும் பணம் 

அதிலொரு  பணத்துக்கு அச்சே இல்ல 


கேட்டதெல்லாம் கட்டுக் கதை 

கட்டுக் கதையைக் கேட்டுக்கிட்டு 

திட்டம் போட்டு வீடு செல்வோம்! 

(எழுதியது: யாரோ) 

பக்கம் –  5