ஒரே பக்கத்தில் மூன்று மாங்காய்!! உத்தம வில்லன் , காஞ்சனா -ii & வை ராஜா வை ( மைக்)

உத்தம வில்லன் 

image

எம்ஜியார்  கண்ணைக் கவர்ந்தார் என்றால் சிவாஜி கண்ணைக் கலங்க வைத்தார். அவர்களின் அடிச் சுவட்டில் ரஜினியும் கமலும் மாஸ் – கிளாஸ் என்ற வரைகோட்டில் பயணித்து வந்தனர். லிங்கா ரஜினிக்குச் சறுக்கல் என்றால் உத்தம வில்லன் கமலைப் பதம் பார்த்து விட்டது.  

கமல் படம் என்றதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். கமலே எழுதாமல் எழுதி, பாடாமல் பாடி, இயக்காமல் இயக்கி, தயாரிக்காமல் தயாரித்து  வெளியிட்ட  படம். இத்தனை  பாரத்தை தாங்காத அவரது முதுகு   முறிந்துவிட்டது என்றே சொல்லலாம். 

தாங்க முடியாத  சோகம் என்னவென்றால் கமல் தன் குருநாதர்     கே பாலச்சந்தரையும்  தேவையில்லாமல் கத்தவிட்டு சாகடித்துவிட்டார். இன்றைய மாமேதை கே விஸ்வநாத் இறுதிக் காட்சியில் கண்ணீர் விட்டு கமலின் காலில் விழத் துடிப்பது  ‘இந்த மாதிரி படம் எடுக்காதே’ என்று சொல்லத் தானோ என்னவோ? 

கதை என்னவென்றால் – திரைப்பட நாயகன் திரைக்குப் பின்னால் செய்யும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான்.  

பிரபல நடிகை ஒருவர் கூறியது ஞாபகம் வருகிறது ’ திரையில் நாயகன் -வாழ்க்கையில் வில்லன். திரையில் வில்லன் உண்மையில் நல்லவன். 

கமல் கோடிகளை இழக்கலாம். கோடான கோடி ரசிகர்களை இழக்கலாமா?  


காஞ்சனா -2 

image

இந்த இரண்டாம் த(தா)ரப் பேய்க்கு முதல் த(தா)ரப் பேயே தேவலை. அதுலே குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரக்  கொஞ்சம் சமாசாரம் இருந்தது. 

இதில் காமெடி என்ற பெயரில் விரசத்தின் எல்லைக்கே போயிருக்கிறார் லாரென்ஸ். 

இந்த திகில் படத்தில்  மிகப் பயங்கரமான காட்சி  க்ளைமாக்ஸ் தான். காஞ்சனா -3 வரப் போகிறது என்பது தான் பயத்தின் உச்ச கட்டம். 

மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த மாதிரி தூசுப் படங்களுக்குத் தடை விதித்தால் நல்லது.


வை ராஜா வை 

image

பணக்கார அப்பாவும்  பிரபலமான கணவனும் இருந்தா எப்படி வேணும்னாலும் படம் எடுக்கிறதா என்ன? 

அம்மா தாயே! உங்களுக்கு ஏன் இந்த ஐ‌டி பசங்க மேல இவ்வளவு கோவம்?அவிகளை ஏன் குடிகாரனா – பொம்பளைப் பொறுக்கியா காட்டறீக!

போதும்டா சாமி!  

பக்கம் – 23