இரண்டு நிமிடம்!

image“அம்மா பசிக்குது!”

“ரெண்டு நிமிஷம் பொறுடா கண்ணு !  மேகி பண்ணித்  தர்றேன்!”

பல ஆண்டுகளாக இந்தியாவின் குழந்தைகளை ஆண்டு வந்தது மேகி ! 

அந்த மேகி இனி இல்லை !

காரணம் சமீபத்திய சோதனைகளில் கண்டுபிடிப்பு ! 

மேகியில் அதிக அளவு ஈயம் கலந்திருக்கிறது.

ஈயம் ஒரு மிகப் பெரிய விஷம்

 ( 0.01% இருக்க வேண்டிய இடத்தில் 17% இருக்கிறதாம் ) .

அத்துடன் அளவுக்கு அதிகமாக மோனோ சோடியம் குளுடமேட்  என்ற மெதுவாகக்  கொல்லும்  ரசாயனம். 

பல மாநிலங்கள் மேகியைத் தடை செய்திருக்கின்றன!

மேகியைத் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனி பூசி மழுப்புகிறது 

சில வருடம் முன் கோகோகோலாவில் பூச்சிக்கொல்லி என்று ஆரம்பித்து பின்னால் மறந்து விட்டார்கள். அதைப் போல மேகி ஆகக் கூடாது ! 

மேகி மட்டுமல்ல மற்ற எல்லா உணவுப் பொருட்களையும் சோதனை போட வேண்டும் ! அதைவிட நமது பரிசோதனைச் சாலைகளுக்கு என்ன வேலை? 

கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!

image