கை! கை! வாழ்க்கை

image


செவிலியின் கைகளில் வாழ்வைத் துவங்குகிறோம்

பெற்றோர் கைகளைப் பிடித்துக் கொண்டு 

நட்புக்  கைகளைப் பற்றிக் கொண்டு

காதலில் கைகளைப் பிணைத்துக் கொண்டு 

துணையைக் கைகளில் அணைத்துக் கொண்டு 

பெற்றதைக் கைகளில் ஏந்திக் கொண்டு 

கற்றதைக் கையில் எடுத்துக் கொண்டு 

சுற்றத்தைக் கைகளில் சேர்த்துக் கொண்டு 

 உழைக்கும் கைகளை நம்பிக் கொண்டு

உதவிடக் கைகளை உயர்த்திக் கொண்டு

வணங்கிடக் கைகளைக் குவித்துக் கொண்டு

துயரத்தைக் கைகளில் வாங்கிக் கொண்டு 

துன்பத்தைக் கைகளில் இறுக்கிக் கொண்டு 

வாழ்வைக் கைகளில் தாங்கிக் கொண்டு 

முடிவில் கைகளை விரித்துக் கொண்டு 

நால்வர்  கைகளில்  வாழ்வை முடிக்கிறோம்!


Click older entries to view remaining pages of current month