சினிமா.. சினிமா..

பு றம்போக்கு…

image

வெகு நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியைப் பார்க்கிறோம். அவருடன்  ஆர்யா, ஷாம்  இருவருடன் கூட்டணி அமைத்து கம்யூனிசக் கண்ணுடன் எடுக்கப்பட படம்.

பி ஜே பி , தே மு தி க , பா மு கா ஆகியோர் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் கலந்து கொண்ட மாதிரி இருக்கு. 

எதிர்பார்ப்பு நன்றாக இருந்தது. ரிசல்ட்? 36 வயதினிலே :

image

S2 தியாகராஜா, திருவான்மியூர் தியேட்டரில் பார்த்து விட்டு வந்த போது எங்க குடும்பக் கும்பலும் மற்றவர்களும் அடித்த கமெண்ட்டின் சுருக்கம்! 

மலையாளத்தில் மஞ்சு வாரியர் பெட்டர்!

கணவனின் வில்லத்தனத்தைக் கொஞ்சம்  கொறைச்சிருந்தால்   நேச்சுரலாக இருந்திருக்கும். 

ஒவ்வொரு ஆம்பளையும் இதைப் பாத்துத் திருந்தணும். 

நாம மொட்டை மாடியில் காய்கறி போடலாமான்னு யோசிக்கிறோம்! ஆனால் இந்த திருந்தாத ஜன்மங்கள் எப்படி  தண்ணி  போடலாம்னு தான் யோசிக்கும்! 

என் துபாய் வேலையை ரிசைன் பண்ணி உன் கனவுக்கு உதவி செய்யட்டுமா?

ஒண்ணும் வேண்டாம்! அவ புருஷன் பாரின் போனப்பரம் தான் அவ உருப்பட்டா! 

இது படம் இல்ல பாடம்!

எத்தனை படத்துக்குய்யா  இப்படி படம் பாடம்  பட்டம் அப்படின்னு பீலா விடுவீங்க?  . 

ஜனாதிபதி கிட்டே கேட்ட கேள்வியில் பெரிய பஞ்ச் இருக்கும்னு பாத்தா ரொம்ப சப் !


மாசு  என்கிற மாசிலாமணி! 

image

படத்தில எல்லாரும் பேயாம்!  படம் முடிஞ்சு வரும் போது நமக்கே சிங்கப் பல் முளைச்சு ரெண்டு காலும் இல்லாத மாதிரி ஒரு நினைப்பு!

இப்பவெல்லாம் ரொம்ப பேய் படமா வருது! பேசாம “பேய் சானல்"னு ஒண்ணு ஆரம்பிக்கலாம் போல இருக்கே! ( சன் டிவி ட்ரை  பண்ணலாம்! டெல்லியில அதுக்குக்    கட்டாயம் லைசன்ஸ் தருவாங்க!)