
யார் இந்த பங்கார்!?
இவர் ஒரு பங்குப் புலி ! பங்கு வணிகத்தின் சந்து பொந்துகள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவர் ! 30 வருடத்துக்கு மேல் பங்காட்டத்தில் பங்கு கொண்டிருப்பவர் !
குவிகம் வாசகர்களுக்காக அவர் தரும் பங்கு டிப்ஸ் !
“இப்போது மார்க்கெட் தூங்கிக் கொண்டிருக்கிறது ! தூங்கும் புலி மீது கல் எறிந்து அல்லது இடறி விடாதீர்கள் ! அது நம்மைத் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ! அது ரொம்ப முக்கியம்!”
பங்கார் சில பங்குகளைப் பற்றிச் சொல்கிறார். அவற்றை அவர் சொன்ன விலைக்கு வாங்கி (இந்த விலை எப்போ வரும் என்பதும் நம் கையில் இல்லை) அப்படியே அதை அடை காத்து பொறுமையோடு காத்திருந்தால் பின்னால் அவை பொன் முட்டைகளாக மாற அதிக வாய்ப்பு உண்டு.
சில காக்கா முட்டையாக மாறலாம்! ( 80 லட்சம் பட்ஜெட்டில் தயாரித்த காக்கா முட்டை படம் 8 கோடி வசூலாமே!)

இந்த மாதிரி போட்டால் ஒரு டிஸ்கிளைமர் கிளாஸ் போட வேண்டுமே!

போட்டாச்சு!