
அண்மையில் முனைவர் இராமலிங்கம் அவர்களின் சொற்பொழிவில் கேட்டு சிரித்து சிந்தித்து மகிழ்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்மொழியின் வளமையை எடுத்துக்காட்ட எத்தனையோ இலக்கண இலக்கியங்களும் காப்பியங்களும் இன்னபிறவும் உள .
இரும்புக்குள் துவாரம் போட்டால் அதை துளை என்று சொல்கிறோம் . அதையே ஊசியின் ஒரு முனையில் துளை போட்டால் அதை காது என்று சொல்கிறோம் .அந்த ஊசியின் காதில் நூலைக் கோர்த்துக் கிழிந்துபோன துணியைத் தைக்கிறோம் . அந்த காதுக்குள் நுழைந்த நூலைப்போல இப்போது வெளியிடும் நூலும் [புத்தகமும்] உங்கள் மனதில் பதிந்து நல்ல சிந்தனையைத் தூண்டி வாழ்வில் வளம் சேர்க்கட்டும் !
எழுதும்போது இயல்பாகவே குனிந்து எழுதுகிறோம் [ பணிவு ] நாம் எழுதும் பேனாவும் குனிந்துதான் எழுதுகிறது எப்போதும் பணிவு நம்மை உயர்த்துகிறது !
“காக்கை கரவா கரைந்துண்ணும்” என்ற குறளுக்கு விளக்கம் சொன்ன ஆசிரியர், காக்கை நாமிடும் உணவை மற்ற காக்கைகளையும் “கா கா” என்று அழைத்து பகிர்ந்து உண்ணும் என்று சொன்னதை வகுப்பு மாணவர்கள் அனைவரும் அந்த காட்சியைத் தாங்கள் நேரில் பார்த்திருப்பதாகச் சொல்லிய போது , ஒரே ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான்: நான் பார்த்த ஒரு காகம் ஒரு முறுக்கை கிழவியிடமிருந்து திருடிவந்து மரத்தின்மேல் உட்கார்ந்து காலிடுக்கில் வைத்துக்கொண்டு தான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்தி சாப்பிட்டதே அது ஏன் என்று .கேட்டான்.
.வகுப்பு நேரம் முடிந்துபோனதால் ஆசிரியர் பதில் தேடியவாறே வீட்டிற்குச் சென்றார்.இரவு தூக்கம் தொலைந்தும் , விடை தென்படவில்லை ..காலையில் மகள் கேட்டாள் ஏம்பா இரவு நீங்க சரியா தூங்கல? மகளிடம் விபரம் சொன்ன ஆசிரியருக்கு மகளிடமிருந்து விடை கிடைத்தது ! மறுநாள் பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவனை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் இவ்வாறு சொன்னார் : நல் வழியில் கிடைத்த உணவை காக்கைகள் பகிர்ந்து உண்டன . திருட்டு வழியில் கிடைத்த உணவை அந்த திருட்டுக் காகம் தான் மட்டும் உண்டது ! எனவே நல் வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படும்., தீய வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படாது என்ற நீதியையும் எடுத்துச் சொன்னார். மாணவர்கள் மகிழ்ந்தனர் !
ஒரு கல்யாண வீட்டுக்குப் பேச அழைத்தார்கள் .பேச ஆரம்பிக்கும் போது , ஐயா பொறுமையா பேசுங்க இப்பத்தான் சாம்பார் தயாராகிக்கிட்டு இருக்குன்னாங்க.நான் பேசிக்கொண்டு இருந்தேன் ! ஐயா இன்னும் கொஞ்ச நேரம் அப்பளம் பொரிச்சவுடன் சொல்றோம் .அப்ப நீங்க பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் சாப்பிடச் சொல்லலாம் என்றார்கள் ! அன்றிலிருந்து கல்யாண வீட்டில் சொற்பொழிவிற்கு நான் போவதை நிறுத்திக்கொண்டேன் !
உயர் அழுத்த மின்சார கோபுரத்துக்கு வெளியே ஒரு போர்டு “தொடாதீர்கள் அபாயம் , தொட்டால்” மரணம் சம்பவிக்கும் “மீறினால் சட்டப்படி ” தண்டிக்கப்படுவீர்கள் “ ……?

இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்சிகளைக் கவிப்பேரொளி நீரை.அத்திப்பூ அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கி மகிழ்வித்தார்.