டிஜிட்டல் லாக்கர்

image


சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இணையதளம் மூலம் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டம்

ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு்ளளது.

ஷேர்களை டிமேட் செய்து பங்கு வர்த்தக பொறுப்பாளரிடம் வைப்பதைப் போல , காசோலைகளை மின் வடிவாக மாற்றி வங்கிகள் பயன்படுத்துவது போல நமது ஆவணங்களை  மின் வடிவில் வைப்பது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய செயல்பாடு. 

டிஜிட்டல் லாக்கர்  முறையில் இணையதளத்தில் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்தியக் குடிமகன் அனைவரும் பேப்பர் ஆவணங்களை பெட்டிகளில் பத்திரப்படுத்துவதைத்  தவிர்த்து அவற்றின் மின்வடிவங்களை அரசாங்கம் வழங்கும் ஈ-லாக்கரில் பத்திரப்படுத்தலாம்.    

ஆதார் எண் வைத்திருக்கும் அனைவரும் டிஜிட்டல் லாக்கர் கணக்குகளை தொடங்கலாம். 

ஒருவருக்கு 10 மெகா பைட் அளவில் இணையதளத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 லாக்கர் வசதியை பெற விரும்புபவர்கள் ஆதார் எண்ணுடன்   இணைந்த செல்போன் எண்ணில் ‘ஒரு முறை பாஸ்வேர்ட்" (OTP ) பெற்று  துவங்கலாம். அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பதிவேற்றம் செய்து அதற்குரிய இணையதள குறியீட்டை பெற்று கொள்ளலாம். 

எதிர்காலத்தில் அரசு துறைகள், கல்லூரிகளில் நாம் பெற வேண்டிய சான்றிதழ்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையில் இணையம் மூலம் எளிதாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உளளது. 

இந்த ஆவணங்களை மற்ற அரசுத் துறையுடன் பகிர்ந்து கொள்ள  வசதி இருக்கும். உதாரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பேப்பர் ஆவணங்களை இணைப்பதற்குப் பதிலாக இந்த இணையத்திலிருந்து நேரடியாக அனுப்பலாம். 

சான்றுகள் அல்லது ஆவணங்களை வேறு இடத்திற்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்படும்போது, சம்பந்தப் பட்டவர்களிடம், இன்டர்நெட் இணைப்பு முகவரியைக் கொடுத்தால் போதும். அதன்மூலம், கல்வி உள்ளிட்ட சான்றுகள், சொத்து ஆவணங்கள் காணாமல் போவது தவிர்க்கப்படும்.

https://digitallocker.gov.in மேற்கொண்ட இணையதளம் மூலம் லாக்கர் கணக்கு துவங்கலாம்.