தி.ஜா பக்கம்

வீடு!

image


ஜானகிராமனின் தனித்தன்மையான பெண்டாளும் கதை இது!

ஒரு டாக்டர். அழகான பெண்டாட்டி. நல்ல கொழந்தைகள். அருமையான வீடு. வீட்டைப் பற்றி டாக்டருக்கு எப்பவும் பெருமை. கம்பவுண்டர் மகாதேவன் வந்து சேர்ந்தான். அவனுடைய சேவையைப் பற்றிச்   சொல்கிறார். .  "பால் வாங்கி மோர் வாங்கி  ஒரு வேலைக்காரன் செய்துவிட்டான்"   என்று பாரதியார் பிரமாதமாக எழுதிவிட்டார். மகாதேவனைப் பார்த்திருந்தால் ‘மகாதேவன் பிள்ளைத் தமிழ்’ என்று காவியமே எழுதியிருப்பார்.

அப்படிப்பட்ட மகாதேவன் டாக்டர் ஊருக்குப் போய் , நடு ராத்திரி வரும் போது அவர் வீட்டில் அவர் கட்டிலில் படுத்திருக்கிறான். அவர் மனைவி சந்தோஷமா தரையில் படுத்திருக்கிறாள். அவர் கட்டிலில் அவன் உடம்பிலிருந்த சந்தன வாசனை அவருக்குக் குமட்டியது. காந்தி செத்துப் போனாப்பல இருந்தது. அவளின் தலையைப் பிடித்துக் குலுக்கினார். மகாதேவனை வேலையை விட்டுத் தொரத்தினார். அதற்குப் பிறகு அவள் தைரியமா அவன் கூட   வெளியில் சுற்ற ஆரம்பித்தாள்.

image

வீட்டை வித்து பாதியைக் கொடுத்திடு நான் போயிடறேன் என்றாள்.  வீட்டை விக்க முடியாதுன்னு ஒத்தக் காலிலே நின்னார் டாக்டர். ஒரு நாள் தலைவிரி கோலமா வந்தாள். மகாதேவன் செத்துப் போயிட்டானாம்.வீட்டை வித்துக் கொடுத்தா அவ போயிடுவா! அதனாலே வீட்டை வாங்க வர்ரவங்க கிட்டே எக்குத் தப்பா பேசி விரட்டிவிட்டுக் கொண்டே அவளுடன்  அதே வீட்டில் இருக்கிறார் டாக்டர்.

image