இந்தியனே தூங்காதே      – கோவை சங்கர்

மழலைக்
குழந்தையில் பேதமில்லை கண்ணே

மழலை மனதினிலே
வஞ்சமில்லை பெண்ணே

முதலில்
சொல்வதுவும் ‘அம்மா’வென்றசொல்லே

முருகனென்றோ
அல்லாவென்றோ ஏசுவென்றோ இல்லெ..!

 

பிறக்கின்ற
குழந்தையொன்  றுங்கொண்டு வருவதில்லை

இறக்கின்ற மனிதனொன்றும்
கொண்டு போவதில்லை

நிலையில்லா
வாழ்க்கையிலே ஏனிந்தத் தொல்லை

அல்லாவா ராமரா
ஏனிந்தச் சண்டை !

நீர்பருக
டம்ப்ளரே வேணுமென்பார் சிலமாந்தர்

ஒர்சிலர்   குவளையிலே மனதாரப் பருகிடுவார்

கலயங்கள்
உருவத்தில் வேறாக இருந்தாலும்

ஜில்லென்ற
தண்ணீரில் பேதமில்லை ஒன்றுதானே !

ராமரென்று
அழைத்தாலும் அல்லாவென்று பணிந்தாலும்

வாமனனே  யென்றாலும்
கர்த்தரென்று சொன்னாலும்

கோயிலிலே
சர்ச்சினிலே மசூதியிலே அருள்கின்ற

தெய்வமும்
ஒன்றுதானே பிரம்மத்தின் பெயர்கள்தானே!

 

இந்தியனே
தூங்காதே மானத்தை வாங்காதே

காந்தியின்
தேசத்தில் எம்மதமும் சம்மதம்

தியாகங்கள்
பலசெய்து ஈன்றநற்  பெயரினையே

நியாயமற்ற  செய்கையால் நொடிப்பொழுதில் இழக்காதே!

சொப்பன  வாழ்வில் (நாடகம் by ஒய்.ஜி‌.மகேந்திரன்)

image


முதல் அரைமணி நேரம் பார்க்கும் போது ‘அவ்வளவு தான். ஒய்.ஜி‌.மகேந்திரன் பழைய பெருங்காய டப்பாகிவிட்டார் என்று தீர்மானம் செய்து பாதியிலேயே கிளம்பிவிடலாம் என்று தோணும். 

ஆனால் நாடகத்தில் அந்த ட்விஸ்ட் வந்த  பிறகு – அதாவது – அசடாக இருந்த அவர் எப்படி புத்திசாலியாக தன்னைப் பழித்தவரைப் பழிவாங்கும்  வில்லனாக மாறுகிறார் என்றதும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.  சில இடங்களில் அவர் பேசும் பஞ்ச் டயலாக் கை தட்டலை  வாங்குகிறது என்பது உண்மை தான். கடைசியில் பழி வாங்குவது தவறு என்பதை அவர் எல்லாரையும் பழி வாங்கிய பிறகு புரிந்து கொண்டார் என்பது காதுல பூ.  

அசடாக இருந்தாலும் மகேந்திரன் ஜோக் அடிக்கணும் அதிலும்  அரசியல் இருக்கணும் என்பது விதியா என்ன? . கேஸ் போட சுப்பிரமணிய சுவாமி, டிராபிக் ராமசாமி இருவரையும் பற்றிச் சொல்லும் போது அரங்கம் கலகலக்கிறது. மற்றபடி ஜோக்குகள்  சுப்பிணி (அருணாசலத்தில்  ரஜினியின் மாமாவாக வரும் இரண்டடி மனிதர்) ஜோக் உட்பட

எல்லாம்

மொக்கை ரகம் தான். 

image

மகேந்திரனிடமிருந்து இன்னும் வித்தியாசமாக புத்திசாலித் தனமாக எதிர்பார்க்கிறோம். அவர் என்னமோ தியாகராஜ பாகவதர் காலத்தை விட்டு வெளியே வர மாட்டேனென்கிறாரே!

சென்னை மெட்ரோ – ஒரு ஜாலியான பயணம்

image

மன்னிக்கவும். இது நம்ம சென்னை மெட்ரோ அல்ல. அதுதானே பார்த்தேன் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது! 


இது தான் நமது மெட்ரோ! ( பங்களூரில் NAMMA METRO . சென்னையில் AMMA METRO ).

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 29ந்தேதி   ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் மெட்ரோ ரயிலைத் துவக்கி வைத்தார். 

image
image


இன்றைய  நிலவரம்: 

 • மெட்ரோ  வருவதற்குக் காரணம்  நாங்கள் தான் என்று தி.மு.க  – அ.தி.மு.க இரண்டும் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன’
 • தி.மு.க வின் ஸ்டாலின் மெட்ரோவில் போகும்போது யாரையோ கன்னத்தில் அறைந்து  விட்டதாக ஒரு வீடியோ வைரலாகப் பரவி முடிவில் அது தவறானது என்று முடிவாகியது.  
 • இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான மெட்ரோ சென்னை மெட்ரோ. பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு 40 ரூபாய்.
 • ஆலந்தூர் ரயில் நிலயத்திலிருந்து வெளியே வருவதற்குள் படி இறங்கி தாவு தீர்ந்துவிடும்.
 • ஆலந்தூரில் இறங்கி கிண்டிக்கு பஸ் பிடிக்க நினைத்தால் ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்கும் போது உங்கள் உயிருக்கு யாரும் ஜவாப்தாரி இல்லை.வடிவேலு  கிணறைக் காணோம் என்ற மாதிரி சப்வேயைக் காணோம்.  


image
image

மெட்ரோவின் சிறப்புகள் ( திட்டப்படி) 

மெட்ரோ இரயில் நிலையங்களில் 

 • தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படும். 

  “ஸ்மார்ட் கார்டு”  முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

 • தானியங்கி  இரயில் இயக்கம், தானியங்கி இரயில் பாதுகாப்பு மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளைக் கொண்டதாக இருக்கும் 
 • முழுவதுமே குளிரூட்டப்பட்ட வசதியுடன் இருக்கும்.
 • முதல் வகுப்பு/ மகளிருக்கென்று தனியாக பெட்டி வைக்கும் யோசனை உண்டு 
 • கடைகள், கழிவறைகள், தொலைக்காட்சி பெட்டிகள், இணைப்புப் பேருந்துகள், வாகன நிறுத்தங்கள் போன்ற வசதிகள் இருக்கும் 
 • கழிப்பறை வசதி இருக்கும்  ( ரயில் தொடர் வண்டிகளில் கழிப்பறை வசதிகள் இருக்காது) 
 • சுரங்கப்பாதையில் பயணிக்கும் போதும், இரயில் நிலையங்களிலும் செல்போன்களில் பேச முடியும். 
 • அவசர சூழ்நிலைகளில் இரயில் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை பொத்தான்களை  அழுத்தி இரயில் ஓட்டுநரை எச்சரிக்கலாம். 
 • அடுத்து வரும் இரயில் நிலையங்களின் பெயர்களை மின் அணுதிரையில் பார்க்கும் வசதியும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் இருக்கும். 
 • உடல் ஊனமுற்றோர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை நிறுத்திவைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். 
 •  நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ இரயில் தொடரில் சுமார் 1,276 பேர் பயணம் செய்யலாம்.
 • WIFI வசதி தர திட்டம் உள்ளது.  
 • வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ இரயிலில் சுமார் 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஆகும். தற்சமயம் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை செல்ல 17 நிமிடங்கள் ஆகும். 

மெட்ரோ இரயில் வழித்தட விவரங்கள்:

image

வழித்தடம் – 1

வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ.

வழித்தடம் – 2

சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ.


மொத்தம் 45.1 கி.மீ.

டிஜிட்டல் லாக்கர்

image


சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இணையதளம் மூலம் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டம்

ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு்ளளது.

ஷேர்களை டிமேட் செய்து பங்கு வர்த்தக பொறுப்பாளரிடம் வைப்பதைப் போல , காசோலைகளை மின் வடிவாக மாற்றி வங்கிகள் பயன்படுத்துவது போல நமது ஆவணங்களை  மின் வடிவில் வைப்பது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய செயல்பாடு. 

டிஜிட்டல் லாக்கர்  முறையில் இணையதளத்தில் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்தியக் குடிமகன் அனைவரும் பேப்பர் ஆவணங்களை பெட்டிகளில் பத்திரப்படுத்துவதைத்  தவிர்த்து அவற்றின் மின்வடிவங்களை அரசாங்கம் வழங்கும் ஈ-லாக்கரில் பத்திரப்படுத்தலாம்.    

ஆதார் எண் வைத்திருக்கும் அனைவரும் டிஜிட்டல் லாக்கர் கணக்குகளை தொடங்கலாம். 

ஒருவருக்கு 10 மெகா பைட் அளவில் இணையதளத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 லாக்கர் வசதியை பெற விரும்புபவர்கள் ஆதார் எண்ணுடன்   இணைந்த செல்போன் எண்ணில் ‘ஒரு முறை பாஸ்வேர்ட்" (OTP ) பெற்று  துவங்கலாம். அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பதிவேற்றம் செய்து அதற்குரிய இணையதள குறியீட்டை பெற்று கொள்ளலாம். 

எதிர்காலத்தில் அரசு துறைகள், கல்லூரிகளில் நாம் பெற வேண்டிய சான்றிதழ்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையில் இணையம் மூலம் எளிதாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உளளது. 

இந்த ஆவணங்களை மற்ற அரசுத் துறையுடன் பகிர்ந்து கொள்ள  வசதி இருக்கும். உதாரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பேப்பர் ஆவணங்களை இணைப்பதற்குப் பதிலாக இந்த இணையத்திலிருந்து நேரடியாக அனுப்பலாம். 

சான்றுகள் அல்லது ஆவணங்களை வேறு இடத்திற்கு அனுப்பவேண்டிய நிலை ஏற்படும்போது, சம்பந்தப் பட்டவர்களிடம், இன்டர்நெட் இணைப்பு முகவரியைக் கொடுத்தால் போதும். அதன்மூலம், கல்வி உள்ளிட்ட சான்றுகள், சொத்து ஆவணங்கள் காணாமல் போவது தவிர்க்கப்படும்.

https://digitallocker.gov.in மேற்கொண்ட இணையதளம் மூலம் லாக்கர் கணக்கு துவங்கலாம்.

ஆத்திச் சூடீ

image


ந ..நா..நீ..

66. நன்மை கடைப்பிடி /  Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /  Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /  Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் /  Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /  Don’t over snack.
71. நூல் பல கல் /  Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /  Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /  Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /  Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் /  Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /  Avoid unhealthy lifestyle.

ப..பா..பி..


77. பழிப்பன பகரேல் /  Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /  Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /  Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /  Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /  Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் /  Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /  Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /  Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /  Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /  Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /  Don’t encourage war.

ம..மா..மி..

88. மனம் தடுமாறேல் /  Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /  Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /  Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் /  Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /  Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /  Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /  Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /  Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /  Do not associate with vamps.
97. மொழிவது அற மொழி /  Speak with clarity.
98. மோகத்தை முனி /  Hate any desire for lust.

வ…வா..வி..


99. வல்லமை பேசேல் /  Don’t self praise.

100. வாது முற்கூறேல் /  Don’t gossip or spread rumour.
101. வித்தை விரும்பு /  Long to learn.
102. வீடு பெற நில் /  Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /  Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /  Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /  Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் /  Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /  Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /  Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /  Be impartial

image
image


இந்த வார இணைய தளம் ஜெயமோகனின் இணைய தளம். 

http://www.jeyamohan.in/

அவருடை மகாபாரதம்  – வெண் முரசு  – ஒரு உலக சாதனையைப் படைக்கப் போகிறது. 

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மாபெரும் புதினம். பல நூறு வருடங்கள் நிலைத்து நிற்கப் போகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

அவரது அறம் என்ற சிறுகதையை  மேலே கூறிய இணைய தளத்தில் இலவசமாகப் படிக்கலாம். அதைப் படித்து முடிக்கும் போது உங்கள் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தால் அது ஜெயமோகனின் எழுத்து ஆள்மைக்கே போய்ச் சேரும்!

டைரக்டர் பாலாவுடன் சேர்ந்து திரைத்துறையிலும் கலக்கி இருக்கிறார். 

 அவரது மற்ற படைப்புகளையும் படிப்போம்! 

சக்ரவாளம்

நாகமும் டி எச் லாரன்ஸும்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13

வந்துசேர்ந்தேன்

எம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்

மலம்(சிறுகதை)

பெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3