
ஹலோ…ஹலோ..டொக்….
தொலைபேசிக்கு தொடர்பறுந்து போய்விட்டது .
அலைபேசியில் எண்களை அழுத்தினான் .“இந்த சந்தாதாரர் வேறு ஒரு இணைப்பில் உள்ளார் சற்று பின்னர் அழைக்கவும்”.
கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன.கைக்கடிகாரத்தைப்
பார்த்தான். மறுபடியும் அலைபேசியில் அழைத்தான் .குரல் மாறாத அந்த மாதரசி மறுபடியும் அதையே சொன்னாள்
ஓ, புது எண் எடுக்கமாட்டான் போலிருக்கு.அவளிடம் அலைபேசி இல்லை.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் .“சந்திரரே,சூரியரே” பாட்டு ஒலித்தது.ஐந்து முறை சந்திரனும் சூரியனும் வந்து விட்டு போனார்கள்.
“ஹலோ….குட் ……மார்னிங் ….செல்…லம்…."குரல் தடுமாற்றலோடு நடுங்கியது.
சார்,குட் மார்னிங் ..நாங்க உங்க மகளை கடத்தி வெச்சிருக்கோம். 25 லட்சம் கொடுத்து மீட்டு … மௌனம்.
திடீரென்று குரல் மாறியது.இங்கபாரும்மா…உங்க அப்பாவை கடத்தி வெச்சிருக்கோம் …3 கோடி நோட்டாக கொடுக்கவும்.நீதானே எம்.டி .டொக்….
ஹலோ…ஹலோ….அண்ணே…ஹலோ….நீங்க யார்னு எனக்கு தெரியாது..அவங்க பொண்ண நான் தான் கடத்தி வெச்சிருக்கேன்.
அப்போ..நீ கிட்னாப் பேர்வழியா..
ஆமா…மொதோ வாட்டி..
அதற்குள் அவள் முழுங்கிய காம்போஸ் மாத்திரை தன் வேலை முடித்தது.
"நான் எங்கே இருக்கேன்”…தமிழ் சினிமாவின் தாக்கம் தெரிந்தது
.உங்கள கிட்னாப் செய்திருக்கிறோம் .பேச்சில் கம்பீரம் தெரியவில்லை.அண்ணே…அவங்க எந்திருச்சுட்டாங்க
.எதிர்முனையில் பிரதர்…
அலைபேசியை ஸ்பீக்கர்ல போடு…அம்மா…ராசாத்தி….உங்க அப்பாவையும் உன்னையும் கடத்திருக்கோம்!…3 கோடி கொடுத்தா…ரெண்டு பேரையும் சேத்தி வெச்சிடுவோம் .மௌனம்..என்னம்மா….
என்னையும் கடத்தி வெச்சிருக்கீங்க ….எனக்கு எங்க அப்பா முக்கியம் …பிசினஸ் அப்புறந்தான் .என் கூட யாரையாவது அனுப்புங்க…..
டீல்…புது பயலே …போயிட்டு வா ….ஆனா உங்க அப்பா எங்க கைலமா….
அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் டிரைலராய் போனது…இப்படி ஒரு வேகமான பெண்மணியை அவன் பார்த்ததில்லை .எண்ணிப் ..பார்த்துக்கோப்பா….எங்க அப்பா எனக்கு முக்கியம்
..அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் போட்டான்.
அண்ணே..பணம் வந்துடிச்சு ….அவள் அப்பாவுடன் இன்னொருவன் வந்தான்.மஞ்சள் பையில் பணத்தை அள்ளினான் எண்ணினான்
.உனக்கு எவ்வளோ பெர்சென்ட் வேணும்…50 பெர்சென்ட் வேணும்..ஏன்னா மெயின் சுவிட்ச் நான் தானே கடத்தினேன்.
பயலே…தெள்ள தெளிவா ஸ்கெட்ச் போட்டு அந்த அம்மா கிட்ட இருந்து நான் தானே பேசினேன்.உரையாடல்கள் முற்றின.
போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் “பெசன்ட் நகரைச் சுற்றி கள்ள நோட்டு கும்பல் நடமாட்டம்.