
பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பாடல்
தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய
விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ்.
இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு
வகையில் பாடுவார்கள்.
பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள்.
1) காப்புப் பருவம்: இது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.
2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிர்ந்து முகம் அசைய ஆடுதல்.
3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் ‘தாலேலோ’ என்று நாவசைத்துப் பாடுதல்.
4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.
5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.
6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.
7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.
பெண் குழந்தைகளுக்கான மற்ற மூன்று பருவப் பாடல்கள்:
8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்
9) நீராடற் பருவம்: ஆற்று ஓடையில் நீராடும்படி பாடுதல்
10) ஊசல் பருவம்: ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிப் பாடுதல்
ஆண் குழந்தைகளுக்கான மற்ற மூன்று பருவப் பாடல்கள்:
8. சிற்றில் இழைத்தல் : அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அவற்றை அழிக்க வேண்டாம் என்று பெண் குழந்தைகள் பாடும் பாடல்கள் இவை.
9. சிறுபறை முழக்கல் : . இப்பருவத்தில் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து மகிழ்விப்பதே இப் பருவமாகும்.
10 சிறு தேர்ப்பருவம் : மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப் பாடுவது இப் பருவமாகும்.

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு
இதன் கடைசிப் பாடலில் ஊஞ்சலாடும் மீனாட்சியின் அழகைச் சிறப்பிக்கிறார்.
மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதைவிட, மீனாட்சி காதில் இருந்த தோட்டின் வேகம்!
அதைவிட, மீனாட்சியின் கண்களின் வேகம்!
அதைவிட, எங்கள் மனது வேகம் அம்மா!…..உன்னிடம் பறி கொடுத்த மனது வேகமோ வேகம்!
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் அருமையான பாடல் இது!
குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்! திருமலை
நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்! மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்! இறங்கி
வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு…..ஓடியே போகிறாள்!
ஆஹா ! என்ன இன்பம்! என்ன இன்பம்!!
முடிந்தால் படியுங்கள் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்!
projectmadurai.org யில் 43வது புத்தகம் இந்த பிள்ளைத்தமிழ்.