“அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்று நாம் படித்த அராபியக் கதையை – கமல் -ரஜினி- ஸ்ரீபிரியா நடித்த படத்தின் கதையை நியூயார்க் பிராட்வேயில் அழகான ம்யூசிகல் காமெடி ஷோவாகப் படைத்திருக்கிறார்கள். 

ஒரு நாடகம் ஒன்றரை வருடத்துக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது –  அதுவும் இன்றைக்குக் கூட அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெறுகிறது என்றால் அதன் சிறப்புக்குச் சொல்லவும் வேண்டுமா? 

ஷோவில் பங்கு பெரும் கலைஞர்களின் எனர்ஜியைப் பற்றி அவசியம் சொல்லவேண்டும். ஓடித் தாவி குதித்துப்  பறந்து ஆடிப் பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.  

மேடையும் ஒளி அமைப்பும் செட்டிங்கும் பிரமாதம் மட்டுமல்ல பிரும்மாண்டம். ஜீனி – ஒரு ஜீனியஸ் என்று நாம் நினைப்பதையே அவர்களும் சொல்கிறார்கள். 

மேடையின் தரையைப் பிளந்துகொண்டு பூதம் வருவதும், பறக்கும் கம்பளத்தில் அலாவுதீனும் ஜாஸ்மீனும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் இருபது அடி உயரத்தில் பறந்து பறந்து வளைய வருவதும், பூதத்தின் குகை செட்டிங்கும், அலாவுதீன் மாடிவீடுகளில் ஏறிக் குதிப்பது, கடைவீதியில் அனைவரும் ஆடிப்பாடுவது சினிமாவில் கூட இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமா என்பது சந்தேகம். டைமிங்க்ஸ் இதைவிட பர்பெக்ட்டாக செய்வது முடியாத காரியம்.

இதைப்பார்க்கும் போது நம்ம ராமாயணத்தை, மகாபாரதத்தை அல்லது பொன்னியின் செல்வனை இப்படி யாராவது எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருகிறது.  அதே சமயம் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு நம்ம மனோகர் இலங்கேஸ்வரன், கம்ஸன், சூரபத்மன், என்று கலக்கியிருக்காரே என்பதை நினைக்கும் போது மனசுக்கு ஆறுதலாயிருக்கிறது. 

page