
ஜீவா
பரபரப்புடன் இருந்தார். அன்று மாலை நேரு விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியின் ஆண்டு
விழாவில் அவர் பங்கேற்க வேண்டும்.
போட்டிகளில்
வென்ற மாணவர்கள் அவர் கையால் பரிசுகள் பெறப்போகிறார்கள். அந்த நிகழ்வை எண்ணி
மாணவர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த அளவிற்கு நாட்டுப்பற்றிலும்
விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் மிக்கவராய் விளங்கியவர் ஜீவா.
மாலைப்
பொழுது…..
விழா
தொடங்கியது.. வாழ்த்துரைகளுக்குப் பின் பரிசளிப்பு நேரம். மாணவர்களுக்குப் பரிசுகளுடன் உற்சாக உரைகளும் வழங்கினார் ஜீவா. நாட்டுப்பற்று, மொழிப்பற்று பற்றி
எல்லாம் குறிப்பிட்டுப் பேசினார். விழா நிறைவு பெறும் வேளை. தேசிய கீதம் ஒலிக்க
வேண்டியதுதான் பாக்கி.
அந்தநேரத்தில்
உதவியாளரை அவசரமாக அழைத்தார் ஜீவா. உடனே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
உதவியாளருக்கு
ஒரு ஐயம். அது நீண்ட நாள்களாகத் தொடர்ந்து வருவதும் கூட… அதை வெளிப்படுத்தும்
வகையில், பணிந்த குரலில், “ஐயா, நீங்க முன்னாள் ராணுவ உயர் அதிகாரின்னு
சொல்லியிருக்கீங்க; உங்களுக்கு தேசிய கீதத்தின் அருமை அதிகமாகத் தெரியும் . ஆனா நீங்க நாட்டுப் பாடல் ஒலிக்கிறத்துக்கு
முன்னாலேயே விழா மேடையிலிருந்து வெளியே வந்துட்டீங்க. இது சரி தானா? தேசிய
கீதத்துக்கு அவ மரியாதை செய்வது ஆகாதா?” என்று மிகுந்த தயக்கத்துடன்
கேட்டார்.
ஜீவா
அவரைக் கூர்ந்து நோக்கியபடி பதில் சொல்லத் தொடங்கினார்.
“ராணுவத்தில்
இருந்தபோது தேசிய கீதம் ஒலிக்கும் போதெல்லாம் எழுந்து நின்று மரியாதையை செய்தவன்தான்
நான். அதை ஒரு கடமையாக மட்டுமல்ல, பெருமையாகவும் கருதியவன் நான் !. இருபது
ஆண்டுகால நீண்ட பழக்கம் அது. இப்போதும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நின்று
மரியாதை செய்ய என் நெஞ்சம் துடிக்கும்: உடம்பு பரபரக்கும். ஆனால், என்னால் அது
எப்படி முடியும்? என்று கலங்கிய விழிகளுடன் கேட்டார், போரில் இரு .கால்களையும் இழந்து,
‘வீல் சேர்’ எனப்படும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஜீவா !
page