ராமரும் அல்லாவும் ஒன்றே
இவ்வுண்மை நாமறிந்தால் நன்றே !
ராமரைத் தொழுகின்ற சோமனும் மனிதனே
அல்லாவை வழிபடும் அப்துலும் மனிதனே
மனிதர்க்கு மனிதர் என்னடா பேதம்
நான்பெரிதா நீபெரிதா என்னடா வாதம் !
இந்துவின் இரத்தம் சிந்தூரச் சிவப்பு
முஸ்லீமின் ரத்தமும் சிவப்பு நிறம்தானே
இறைவனவன் வேறானாலும் பிறப்பால்நாம் மனிதஜாதி
கழிக்கின்றோம் சண்டையில் வாழ்க்கையில் சரிபாதி !
மதப்பெயரால் வாதிடுதல் பைத்தியத்தின் செயலடா
வேற்றுமையில் ஒற்றுமை காண்போமென முழங்கடா
பாரதத்தின் புதல்வரென பெருமையொடு சொல்லடா
நமக்குநிக ரில்லையென தமுக்கடித்து கூறடா !