பொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் )

 

மேலே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா? 

 

இனி , பொங்கலுக்குக் கவிதை ஒண்ணு எழுதலாமா?

 

மஞ்சளைத் தேய்ச்சுக்  குளிக்கறதும் போச்சு

மஞ்சத்தண்ணி  ஊத்தித் தொரத்தறதும்  போச்சு

உறியடியில வழுக்கி அடிக்கறதும்   போச்சு

எருதைப் பூட்டிஏர் ஓட்டறதும்   போச்சு

 

வீட்டுக்கு வெள்ளை அடிக்கறதும்  போச்சு

மாட்டுக்கு மாலை போடறதும்  போச்சு

கரும்பைப் பல்லில்   கடிக்கறதும் போச்சு

கருக்கல்ல எழுகிற பழக்கமும்  போச்சு

 

பூளைப்பூ கொத்தைச் சொருகறதும் போச்சு

பானையில  பொங்கல் வைக்கறதும் போச்சு

கண்டாங்கி சேலையை சொருகறதும் போச்சு

வேட்டியைத் தழையக் கட்டறதும் போச்சு

 

வாழை இலைச்சோறு திங்கறதும் போச்சு

வாழ்த்துமடல்  எழுதி அனுப்பறதும்  போச்சு

வாசல்ல கோலம் போடறதும்  போச்சு

உறமுறையைக் கண்டு கலாய்க்கறதும் போச்சு

 

பரம்பரைப் பழக்கம்  எல்லாமே போச்சு 

ஜல்லிக்கட்டு மட்டும்  வேணும்டா மச்சான் !