நல்லி குப்புஸ்வாமி அவர்கள் எழுதிய தி நகர் அன்றும் இன்றும் என்ற புத்தகத்திலிருந்து சில சுவையான தகவல்கள்:
.
- தி .நகர் 1923-25 இல் நிர்மாணிக்கத் திட்டம் தீட்டப் பட்டது. .
- 1916இல் தி.நகரில் ஒரு பெரிய ஏரி இருந்தது.
- 1920இல் சுப்ரமணிய ஐய்யர் என்பவரிடம் நூறு ஏக்கருக்கு மேல் தி.நகரில் இடம் இருந்ததாம் .
- மாம்பலம் தி.நகரை விடப் பழமையானது.
- 1920இல் ஒரு மனையின் விலை 500 ரூபாய் தான்..
- 1933 இல், பாண்டிச்சேரி சொக்கலிங்க முதலியார் 10 கடைகளைக் கட்டினார். அதுவே பாண்டி பஜார் ஆயிற்று. .
- 1948 இல் ரங்கநாதன் தெரு ஒரு அக்ரகாரமாக இருந்தது. .
- இரண்டாம் உலகப் போரின் போது சென்னை உயர் நீதி மன்றம் தி.நகரில் இருந்த ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வெண்ட்டுக்கு மாற்றப்பட்டது. .
- 1930இல் தி.நகர் கிளப்பிற்காக 14 மனை இடம் அரசாங்கத்திடமிருந்து வாங்கப்பட்டது.
- 1930 களில் இரவு 10 மணிக்குப் பிறகு தி.நகரில் நரிகளின் நடமாட்டம் இருந்து வந்தது. .
- இப்போது இருக்கும் கண்ணதாசன் சிலைக்குக் கீழே ஒரு பெரிய பொதுக் கிணறு இருந்தது.
- 1930 களில் மக்கள் பனகல் பூங்காவில் அமர்ந்து 7.15 மணிக்கு செய்திகள் கேட்பது வழக்கம்.
- இரவு எட்டு மணிக்குப் பிறகு தி.நகரில் மனித நடமாட்டமே இருக்காது.