நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?
முடிஞ்சா வரேன்.
முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.
எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்கச் சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..! .
‘என்னங்க, குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?”
”சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?”
5 வயசுல “மதர்” சொல்றதை கேட்கணும்….
25 வயசுல “பிகர்” சொல்றதை கேட்கணும்…
45 வயசுல “சுகர்” சொல்றதை கேட்கணும்….
“இது தான் ஆண்களுக்கு வாழ்க்கையின் விதி
கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !
கோயில்ல எதுக்கு நடிகர் அஜித்தோட கதையை புத்தகமா விக்கிறிங்க?
யோவ் அது “தல”புராணம்யா.. நீ நினைக்கிற தல” இல்லை.
.பேங்கில ஒரு கிராமவாசி கடன் வாங்க வந்தார். மேனேஜர் , உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்தால் தான் லோன் கிடைக்கும் என்றார். சரி என்று நிலத்தைக் கொடுத்து கடன் வாங்கிச் சென்றார்.
கொஞ்ச வருடம் கழித்துக் கடனைக் கட்டிவிட்டுத் தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகக் கூறினார் அந்தக் கிராமவாசி. மேனேஜர் தன்னுடைய வங்கியில் டெபாசிட் பண்ணுமாறு கேட்டார். பதிலுக்கு அவர் “அடமானமா நீங்க உங்க வங்கியின் சொத்தைக் கொடுங்க ” என்றார்.
கொடுத்து வச்சவங்க டெல்லி முழுவதும் வைஃப் இலவசமாமே.?
உன் தலையில இடி விழ.! அது வைஃப் இல்ல வைஃபை..!
எங்க மேனேஜர் கங்காரு மாதிரி
ஏன் , தாவிக்கிட்டே இருப்பாரா?
இல்லை எப்பவும் ஒரு குட்டியோட தான் இருப்பார்.