தமிழ் நாட்டில் போர் மேகங்களைப் போல் தேர்தல் மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவும், திமுகவும், சீஸா விளையாட்டுப் போல் ஒருமுறை அதுவும் அடுத்த முறை இதுவும் என்று மாறி மாறி வந்துகொண்டிருக் கின்றன.
இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காமராஜர் அன்று கூறினார். ஆனால் தமிழகத்து இவை குட்டையும் மட்டையும் அல்ல. ராஜபாட்டையில் ஓடுகிற குதிரைகள்.
எம்ஜியார் 1987இல் இறந்த பிறகு வந்த 1989 ல் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி முதல்வர்.
1991 ல் ஜெயலலிதா முதல்வர்.
1996 ல் கருணாநிதி ,
2001ல் ஜெயலலிதா,
2006 ல் கருணாநிதி,
2011 ல் ஜெயலலிதா
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா சிறைக்குச் செல்வார். பிறகு தீர்ப்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆவார்.
நடுவில் ரஜினி ‘பார்ட்டி எப்போ ஆரம்பிக்கலாம்’ என்று கேட்டுக்கொண்டு வருவார். பிறகு வாய்ஸ் கொடுத்து விட்டு ஓட்டுச் சாவடியில் இரட்டை இலை அடையாளம் காட்டிவிட்டு ஓரம் கட்டி விடுவார்.
போன தடவை புது வரவு விஜய்காந்த். அதிமுகவுடன் சேர்ந்து 29 இடங்களில் வென்று தனக்கு ஒரு புதிய இமேஜை ஏற்படுத்திக் கொண்டு பிறகு அவருடைய ஸ்டைலிலேயே அவற்றையெல்லாம் கலைத்துக்கொண்டு தற்போது கிங்க்மேக்கர் கனவில் ஏன் அதற்கும் மேலே முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
தெரிந்த பிசாசு என்ற வகையில் திமுகவும் காங்கிரசும் மீண்டும் கைகோர்க்கத் தயாராகி விட்டார்கள்.
வைகோவின் மக்கள் நலக் கூட்டணி , இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், பாட்டாளி மக்கள் அன்புமணி முதல்வர் கனவுக் கட்சி, பி ஜேபி, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ். மற்றும் சிறு கட்சிகள் இவையெல்லாம் எப்படி எந்த அணியில் இணைவார்கள் என்பது உண்மையிலேயே ‘மில்லியன் டாலர் ‘ கேள்வி தான்.
லயோலா கருத்துக் கணிப்பு என்று வந்ததில்
அதிமுவிற்கு 34.1% ஆதரவு
திமுகவிற்கு 32.6% ஆதரவு
தேமுதிகவிற்கு 4% ஆதரவு
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3% ஆதரவு
பிஜேபிக்கு 2.9 % ஆதரவு
என்று சொல்கிறார்கள்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்றைய சூழ்நிலையில் எப்படிக் கூட்டணி அமையும் என்று ஒரு தாயம் உருட்டிப் பார்க்கலாமா?
- அதிமுக + வைகோ + இரு கம்யூனிஸ்ட் + த மா க + ஓரிரு சிறு கட்சிகள்
- திமுக + தேமுதி க + காங்கிரஸ் + ஓரிரு சிறு கட்சிகள்
- பிஜேபி + பாட்டாளி மக்கள் கட்சி + ஓரிரு சிறு கட்சிகள்
மக்களுக்கு ஒரு நப்பாசை . சகாயம் ஐஏஎஸ் தனியாக ஒரு கட்சி அமைத்து, தேர்தலில் நின்று அரவிந்த் கேஜ்ரிவால் மாதிரியோ அல்லது ஒருநாள் முதல்வர் மாதிரி வென்று முதல்வராக வரமாட்டாரா என்ற ஏக்கம் பேஸ் புத்தகங்களில் தலையெடுக்கிறது.
பொறுத்திருந்து பார்ப்போமா?
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா