o
இந்தப் பெண்மணி பார்ப்பது என்ன? பேஸ்புக்கா? அல்லது ஈமெய்லா?
அந்தக் குட்டிப்பெண் கையில் என்ன லேப் டாப்பா ?
இது கி மு 100 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட பழங்காலக் கிரேக்கச் சிலை.
அதெப்படி அந்தக் காலத்தில் லேப்டாப் ?
அது எங்கிருந்து வந்தது ?
ஒருவேளை அந்தக் காலத்தில் இருந்த கிரேக்க நகரமான டெல்பியில் இருந்த ஆரக்கிள் என்ற சூன்யக்காரி இப்படி ஒரு கருவி வரும் என்று சொல்லியிருப்பாளோ?
அல்லது வெளிக் கிரகத்திலிருந்து வந்த மக்கள் பயன்படுத்திய கருவியாக இது இருந்திருக்கலாமோ ?
விடை தெரியாத புதிர் இது !
படமும் கருத்தும்: http://www.livescience.com/53629-greek-statue-not-using-laptop.html
ஆரக்கிள் பற்றி ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
கிரேக்க மாபெரும் வீரன் அலெக்ஸாந்தர் , தான் உலகத்தை முழுதும் வெல்வோமா என்று தெரிந்துகொள்ளக் குறி சொல்லும் ஆரக்கிளை அணுகினான்.
யுத்தத்திற்குப் போகுமுன் அலெக்சாண்டர் ஆரக்கிளிடம் நல் வாக்குக் கூறும்படி வேண்டினான். ஆனால் அன்றைக்கு ஆரக்கிள் மௌன விரதத்திலிருந்தாள். பேச மறுத்தாள். அலெக்ஸாண்டரோ பிடிவாதத்துடன் ” நான் உலகத்தை வெல்வேனா ? பதில் கூறு ” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

ஆரக்கிள் பதிலே சொல்லவில்லை. கடைசியில் அலெக்ஸாண்டரின் தொந்தரவு பொறுக்கமாட்டாமல் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றி ” உன்னை ஜெயிக்கவே முடியாது ” என்று சொல்லி மௌன விரதத்தைக் கலைத்துவிட்டு “உனக்கு என்ன வேண்டும் ? ” என்று கேட்டாளாம்.
” ஆரக்கிள் ஏற்கனவே சொல்லிவிட்டது . அது போதும் எனக்கு ” என்று சொல்லி விட்டு அலெக்ஸாண்டர் யுத்தத்திற்குப் புறப்பட்டானாம்.
இது எப்படி இருக்கு?