‘சுதந்திரம் 251’ என்று புது ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது !!
ஆதாரம் : ndtv.com (http://gadgets.ndtv.com/mobiles/features/freedom-251-launch-your-5-point-cheatsheet-to-the-most-affordable-smartphone-803311?pfrom=home-lateststories )
ரிங்கிங் பெல்ஸ் என்ற நாய்டாவைச் சேர்ந்த நிறுவனம் சுதந்திரம் 251 என்ற ஸ்மார்ட் போனை உலகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் விற்பதற்குத் தயாராயிருக்கிறது.
அதனுடைய இணையதளத்தில் அந்த அலைபேசியின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
4” திரை, 1.2Ghz ப்ரோசெஸர் , 1GB மெமரி , மற்றும் 8 GB சேமிப்பு வசதி, 3.2 மெகா பிக்ஸெல் பின் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் முன் கேமரா மற்றும் 1450 amHபேட்டரியுடன் ஸ்மார்ட் போன் வெளிவரத் தயாராயிருக்கிறது.
17 ந்தேதி புதன் மாலை டாக்டர் முரளிமனோகர் ஜோஷி MP மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பார்ரிகர் அவர்கள் முன்னிலையில் சுதந்திரம் 251 என்ற ஸ்மார்ட் போன் வெளிடப்படும் என்று தெரியவருகிறது.
இது பிரதமர் மோடி அவர்களின் ‘மேக் இன் இந்தியா ‘ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாகவும் இந்ததிட்டம் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை நனவாக்க உதவும். என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
இதன் அதிகாரபூர்வமான விற்பனை பிப்ரவரி 18 காலை 6.00 மணிக்குக் கம்பெனியின் இணையதளத்தில் துவங்கும் என்று தெரியவருகிறது. பிப்ரவரி 21 இரவு 8.00 மணிக்கு விற்பனை முடிவுறும் என்றும் ஜூன் 30, 2016இல் அலைபேசிகள் விநியோகிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.
மற்ற விவரங்களுக்கு http://www.freedom251.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.