நகைச்சுவை மன்னர்கள் : பாக்கியம் ராமஸ்வாமி

இன்றையப் பெருசுகளால் பெரிதும் அன்றும் – இன்றும் – என்றும் விரும்பப்பட்ட  அப்புசாமி – சீதாப்பாட்டியைப் படைத்த  பாக்கியம் ராமசாமியின் வாழ்க்கைக் குறிப்பு

(
BhakkiamRamasami

நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி, சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும். 

அவரது சிறப்புகள்:

அவர் சிருஷ்டித்த அப்புசாமி, சீதாப்பாட்டி  கதை முதன்முதலில் குமுதத்தில் வெளிவந்த ஆண்டு 1963.)

37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990’ம் ஆண்டு ஓய்வு​பெற்றார். 

ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் ​பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். 

சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்று பாராட்டுப்​பெற்றவர். இலக்கிய.க் கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவைகள் ​பேசியிருக்கிறார். ‘ஞானபாரதி’ ‘எழுத்துச் செம்மல்’ போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர்.

 ‘பாமரகீதை’ என்னும் சிறு நூலை பகவத் கீதையின் கருத்துக்களாக ஜராசு என்ற பெயரில் எழுதியுள்ளார்.

சிறுவர்களுக்காக வால்ட் டிஸ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் கார்ட்டூன் படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியுள்ளார்.

நகைச்சுவையைத் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் ‘அப்புசாமி டாட் காம்’ என்ற வலைத் தள பத்திரிகை நடத்தி வருகிறார்.

நலிவுற்ற நகைச்சுவை எழுத்தாளர்களின் ​மேம்பாட்டுக்கும், அனைவரது நகைச்சுவையையும் தொகுக்கும் பணிக்காகவும் ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ என்ற அமைப்பையும், அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ என்ற அமைப்பையும்  சமீபத்தில் துவங்கி நடத்தி வருகிறார்.

அவரது ஆடியோ புத்தகம் ஒன்றை காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகக் குரல் கொடுக்க பாம்பே கண்ணன் தயாரித்திருக்கிறார். இதன்  யூ டியூப் வடிவத்தைக் கேளுங்கள்:

 அப்புசாமியாகக் காத்தாடி ராமமூர்த்தி பங்கேற்கும் ஆடியோ கதைககள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. டி வி தொடர்களும் வந்துள்ளன.

அப்புசாமி கதைகளில் கூடவே வருபவர்கள் : சீதாப்பாட்டி, ரசகுண்டு, பீமாராவ் , அரை பிளேடு அருணாசலம், கீதாப் பாட்டி, பொன்னம்மா டேவிட் போன்றவர்கள்.

அப்புசாமியின் அல்பத்தனம், சீதாப்பாட்டியின் ஆங்கிலம் மற்ற அவரது சிஷ்ய கோடிகளின் மடத்தனம் எல்லாம் சுத்த கலீஜா இருக்கும்.

நசுங்கின ஈயச்  சொம்பு போன்ற அவரது முகத்தை வரைந்து அதன் மூலம் பிரபலமான ஓவியர் ஜெயராஜ் தனது டிரேட் மார்க்காக வைத்திருந்தது அப்புசாமி-சீதாப்பாட்டியின் ஸ்கெட்ச் தான்.

பாக்கியம் ராமசாமியின்
அப்புசாமி கதைகள்

Appusamiyum Africa Azhagiyum - அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்Veerappan Kaatil Appusamy - வீரப்பன் காட்டில் அப்புசாமி

அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும் என்கிற நாவலைப் பற்றி நூல் உலகம் என்ற இணையத் தளம் இப்படிக் கூறுகிறது:

அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்!  இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச் சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, ‘மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.

நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே ‘பச்சக்’ என்று அவளுடன் சட்னிபோல் ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன? ஒரே கன்னாபின்னா ரகளைதான்!

இடீலியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.

உளுந்து வடையையே உருப்படியாக முடிக்கத் தெரியாத அப்புசாமியால், வீரப்பன் கொடுத்த உடும்புக் கறியை எப்படிக் கடிக்கமுடியும்?

வீரப்ப மீசையோடு, அவனது உடையையே அணிந்துகொண்டு, துப்பாக்கியோடு அந்தக் காட்டில் அலைந்து திரிந்து அழிச்சாட்டியம் செய்யும் தைரியம் அப்புசாமிக்கு எப்படி வந்தது?

அப்புசாமி காட்டிலிருந்து அனுப்பிய கேசட்டில், கெக்கேபிக்கேத்தனமாகக் கூறப்பட்டிருந்த செய்தி என்ன? அப்புசாமியைப் பார்க்க நக்கீரன் கோபால் ஏன் போகவில்லை?

– See more at: http://www.noolulagam.com/product/?pid=2243#sthash.umdp0Tpw.dpuf

விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்!