பீபி-கா-மக்பரா ( ஜே ராமன்)

 

இந்த  நேர் பிரதி உலகப் புகழ் தாஜ் மஹால் அல்ல.  அதைப் போலவே உருவாக்கிய மொகலாயக் கட்டடம்.

இது பீபி-கா-மக்பரா  என்று அழைக்கப்படும். இருக்குமிடம் அவுரங்காபாத்திலிருந்து 5 கிமீ தொலைவில்.

இந்த அழகிய மசோலியம் ,மொகலாய  மன்னன் அவுரங்கசீப் (1658-1707) மனைவி ராபியா -உல்-தௌரானி  அல்லது டிராஸ் பானு பேகத்தின் நினைவுக்காகக் கட்டப்பட்டது.

அரச குமாரர் அசாம் ஷா அவரது தாயின் நினைவாக கிபி 1651-1661 நூற்றாண்டுகளில்  இதை எழுப்பியிருக்கிறார்.

இதை  வடிவமைத்து உருவாக்கியவர் அடா-உல்லா என்னும் கட்டிடக் கலைஞர் என்றும்,  ஹான்ச்பெட் ராய்  என்னும் பொறியியலாளர் என்றும் பிரதான நுழை வாயிலில் கிடைத்த கல்வெட்டுகளினால் தெரியவருகிறது.

பின்புறம் அமைந்துள்ள அழகிய மலைத் தொடர்களின்   வடிவங்களிலும்  பசுமையான தோட்டங்களின்  மத்தியிலும்  இந்த சமாதியைப் பார்த்து  ரசிப்பது  ஒரு பிரமிப்பான அனுபவமே!

இதனைக் கட்டிமுடிக்க  ரூபாய்  6,68,2037-7,    1651-1661 ஆண்டுகளில் செலவாயிற்று என்றும் தெரியவருகிறது.

இந்த மசோலியம்  தாஜ் மஹாலைத் தோற்கடிக்கத்  தொடங்கியபோதிலும், தரம்கெட்ட நகல் வடிவமாக முடிவடைந்தது.

காரணம் தாஜ்மகாலின்  அஸ்திவாரம் ஆழமான காதலில் போடப்பட்டது. அது அசல். அதனால் உலக அதிசயங்களில் ஒன்றானது.

இந்த பீபி கா மர்க்காரா போட்டிக்காகக் கட்டப்பட்டது. அசல் அசல் தான். நகல் நகல் தான்.

 

இதைப் பார்க்கும் போது ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலும் அதே வடிவில்  அவன் மகன் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுர சிவன் கோவிலும்  நினைவுக்கு வருகிறது.

தந்தையின் கோவிலைவிடப் பெரியதாக இருக்கக்கூடாது என்று சற்று சிறியதாகக் கட்டினானாம் ராஜேந்திரன். பாண்டியர் படையெடுப்பால்  இது  மிகவும் சிதிலமடைந்து காணப் படுகிறது.  மராட்டியர் பராமரிப்பால்  தஞ்சைக் கோவிலுக்கு மெருகு கிட்டியது.

தஞ்சைக் கோவில்

002

கங்கை கொண்ட சோழபுரக் கோவில்

032