குட்டீஸ் லூட்டீஸ் : கோணங்கள் (சிவமால்.)

 

‘சம்மர் வந்தாச்சு… வாங்க.. நாம நம்ம ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்கு
போய் ஒரு ஏர் கண்டிஷனர் வாங்கிடுவோம்..’ என்ற டி.வி.
விளம்பரத்தை நானும், என் மனைவியும், என் பத்து வயதுப்
பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘ஓ கே .. புறப்படு ரமா.. ஸம்மர் சூடு தாங்கலை. நாமும்
இப்பவே ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்குப் போய் ஓர் ஏர் கண்டிஷனர்
வாங்கிடுவோம்’ என்றேன் மனைவியிடம்.

‘நோ… வேண்டாம்பா… இந்த ஆன்டி நம்மள ஏமாத்தறாங்க..
இதே ஆன்டிதான் போன வருஷமும் இதையே சொன்னாங்க..
அந்த ஏர் கண்டிஷனர் ஒரு வருஷம் கூட வரவில்லை போலிருக்கு.
அதுதான் இந்த வருடமும் வாங்கக் கிளம்பிட்டாங்க. இவ்வளவு
காசைக் கொட்டி வாங்கிட்டு ஒரு வருஷம் கூட வரலைன்னா
எப்படீப்பா..? அதனாலே இந்த ஸ்டோர்ஸ் வேண்டாம்பா.. வேறே
நம்பகமா ஒரு கடைக்குப் போவோம்’ என்றாள் என் பெண்.

திகைத்து நின்றோம் நானும், என் மனைவியும். அட,
இப்படியும் ஒரு கோணத்தில் விளம்பரங்களைப் பார்க்கலாமா..!.