குவிகம்- 29 , மே 2016 (email: editor@kuvikam.com)
அன்புள்ள குவிகம் வாசகர்களுக்கு,
வணக்கம்
நீங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர் ! ஆம். குவிகம் வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டுவிட்டது !
அதாவது, உங்கள் குவிகம் இதழ் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ( அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது)
இன்றில்லாவிட்டாலும் நாளை படிக்கப் போகிறார்கள் !
குவிகம் இருபத்தொன்பது மாதங்களாக வருகிறது.
மாதம் 25 மின்-பக்கங்கள் – மொத்தம் 725 பக்கங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக நமது குவிகத்தை kuvikam .com என்ற தனி அமைப்பில் கொண்டுவந்துள்ளோம். அதற்குப்பிறகு 2766 பார்வைகள் 1327 பார்வையாளர்கள். போதாதுதான். இன்னும் நிறைய வாசகர்களை நமது தளத்துக்கு அழைத்து வரவேண்டும் !
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் !
( பயப்படாதீர்கள்! காகித விலையேற்றம் காரணமாக பத்திரிகையின் விலையை ஏற்றப் போகிறோம் என்று சொல்லப்போவதில்லை – சொல்லவும் முடியாது. )
உங்கள் கருத்துகளைத் தற்போது நேரில் சந்திக்கும்போதும், போனில் பேசும்போதும் சொல்கிறீர்கள் ! தயவுசெய்து இமெயில் மூலமாக அல்லது குவிகத்தின் பக்கங்கள் மூலமாக எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, பரவாயில்லை , மோசம் என்ற கமெண்ட்ஸ்களையும், மற்ற உங்கள் பொதுக் கருத்துகளையும் எங்களுக்கு எழுதுங்கள் !
மற்ற நண்பர்களின் ஈ -மெயில்களையும் editor@kuvikam.com என்ற நமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – அவர்களையும் நம் குவிகத்தில் குவிக்கலாம் !
நன்றி !
My heartiest congratulations to the team of enterprising editors of Kuvikam on their excellent editorial endeavour. Hit a mighty century with a much greater mass appeal and following
LikeLike