தலையங்கம்

தமிழகத்தில் தேர்தல் அழகாக அமைதியாக நடந்து முடிவடைந்துவிட்டது.

தமிழகம் முழுவதும் ஜே ஜே என்று இருக்கிறது.

tamil nadu, jayalalithaa, tamil nadu election results, tamil nadu elections, aiadmk, aiadmk tamil nadu elections, jayalalithaa tamil nadu elections, jayalaithaa second term, india news, tamil nadu news, latest news

(படம்: நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் )

அம்மா தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கியதன்  மூலம் எம் ஜி ஆரின் சாதனையையும் தொட்டிருக்கிறார்.

எப்போதும் மாற்றத்தையே விரும்பும் தமிழக மக்கள்  இம்முறை ஒற்றையா ரெட்டையா என்று பார்த்து இரண்டும் இரண்டாப்பை இரண்டும் கழண்டாப்பை என்று முடிவுகட்டி இருவருக்கும் மாறி மாறிக்  குத்தினார்கள். விளைவு அதிமுகவிற்கு 134 திமுகவிற்கு 89 காங்கிரஸ் 8 மற்ற கட்சிகள் எல்லாம்  ‘ஓட்டை ஆப்பை’ என்று அவைகளைத் தூர வீசிவிட்டார்கள்.

முடிவு அம்மாவிற்குச் சாதகமாக வந்தது.

அமெரிக்காவில் டெமோக்ரெடிக் , ரிபப்ளிக் என்று இரு கட்சிகள் மட்டுமே இருப்பது போல நமது தமிழகத்திலும்  அதிமுக அல்லது திமுக என்று இரண்டே அணிகள் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உதிரிக்கட்சிகளையும் ஓட்டைக்கட்சிகளையும் ஜாதிக்கட்சிகளையும் மக்கள் ஓரம்கட்டிவிட்டார்கள். நல்ல ஆரம்பம். இது தொடரவேண்டும.

வளமான  ஆளுங்கட்சி –  வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் ஆணி வேர். மக்கள்  இதற்கு நீரை வார்த்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்குச் செல்வது, ஜெயலலிதாவும் ஸ்டாலினும்    ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லுவது போன்ற அரசியல் நாகரிகங்கள் துளிர் விடுகின்றன.

ஜெயலலிதாவும் பா ஜ கவின் என் டி ஏ இல் சேரலாம்  என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. அப்படி நடந்தால் தமிழகத்துக்கு ‘நல்ல காலம் வருது’ என்று குடுகுடுப்பை ஆட்டலாம்.

நல்ல நம்பிக்கையோடு நமது பணியைத் தொடருவோம். நடப்பவை நல்லதாகவே இருக்கும்  என்ற நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்போம்.

1எடிட்

 

Tamil Nadu Legislative Assembly election, 2016-ta.png

ஏப்ரல் 29, 2016 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி

 • பெண் வாக்காளர்கள் = 2,93,33,927
 • ஆண் வாக்காளர்கள் = 2,88,62,973
 • மூன்றாம் பாலினத்தவர் = 4,720

வயது வாரியாக வாக்காளர்கள்

 • 18 முதல் 19 வயதுடையோர் – 21.05 இலட்சம்
 • 20 முதல் 29 வயதுடையோர் – 1.17 கோடி
 • 30 முதல் 39 வயதுடையோர் – 1.39 கோடி
 • 40 முதல் 49 வயதுடையோர் – 1.24 கோடி
 • 50 முதல் 59 வயதுடையோர் – 87.32 இலட்சம்
 • 60 முதல் 69 வயதுடையோர் – 56.15 இலட்சம்
 • 70 முதல் 79 வயதுடையோர் – 26.58 இலட்சம்
 • 80 வயதிற்கு மேற்பட்டோர் – 8.4 இலட்சம்


election 2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.