கிரேஸி மோகன் எஸ் எஸ்

கிரேஸி மோகன் – தமிழ் நாடக உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக சிரிப்பு மழை பொழிந்துகொண்டிருக்கின்றவர். (எஸ் வி சேகர் ஒருவரைத்  தான் இவருக்குப் போட்டியாளராகக் கருதவேண்டும்). இவர்கள் வந்த பிறகு தமிழ் நாடகத்தின் தலையெழுத்தே சிரிப்புத் தோரணமாக மாறிவிட்டது என்று குறையும் உண்டு. ஆனாலும் நாடகம் திரைப்படம் தோலாக்காட்சி என்ற மூன்று  துறைகளிலும் நகைச்சுவையை வாரி வழங்கியவர் கிரேஸி மோகன்.

அவருடைய முதல் நாடகம் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேஸி மோகன் எழுதி எஸ் வி சேகர் நடித்த நாடகம்.  பயங்கர ஹிட்.  அதன் டாப் கிளாஸ் நகைச்சுவை வசனங்கள் குமுதம் பத்திரிகையில் தொடராக வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றன.

அவரது  மற்ற நாடகங்கள்

 

ஒரு சொந்தவீடு வாடகை வீடாகிறது, – எஸ் வி சேகர்
ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட், எஸ் வி சேகர்
ரிடர்ன் ஆப் கிரேஸி தீவ்ஸ்,
கிரேஸி கிஷ்கிந்தா,
அய்யா அம்மா அம்மம்மா – காத்தாடி ராமமூர்த்தி
அலாவுடீனும் 100 வாட்ச் பல்பும்
மேரேஜ் மேட் இன் சலூன் -பாலசந்தரால் திரைவடிவும் ஆனது.  
மாது பிளஸ் டூ
மதில் மேல் மாது
மாது மிரண்டால்
ஜூராஸ்ஸிக் பேபி
மீசை ஆனாலும் மனைவி
ஒரு பேபியின் டயரிக் குறிப்பு
சாட்டிலைட் சாமியார்
சாக்லேட் கிருஷ்ணா
கூகுள் கடோத்கஜன்

திரைப் படங்களிலும் கிரேஸி மோகன் தன் சிரிப்பு முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அவரும் கமலும் சேர்ந்தால் படம் சிரிப்பில் எகிறும். படங்களில் இவரும் சேர்ந்து நடிக்கும்  போது காமெடி சும்மா களை கட்டும்.

கிரேசியின் கிரேஸி படங்கள் :

அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காம ராஜன்
மகளிர் மட்டும்
இந்திரன் சந்திரன்
சதி லீலாவதி
அவ்வை சண்முகி
தெனாலி
காதலா காதலா
பம்மல் கே சம்மந்தம்
பஞ்சதந்திரம்
வசூல் ராஜா எம் பி பி எஸ்
ஆஹா
அருணாசலம்

இந்தப் படங்களில் இவருடைய நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கும்.

தொலைக்காட்சியில் 90 களில் அதுவும் டி‌டி1 மற்றும் டி‌டி2 இருக்கும் போது இவரது நகைச்சுவைத் தொடர்களில்  ஈர்க்கப்படாத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம்.

ஹியர் ஈஸ் கிரேஸி                                                                                                           மாது -சீனு                                                                                                                         நில் கவனி கிரேஸி                                                                                                         சிரி  க ம ப த நி                                                                                                                   கிரேஸி நேரம்                                                                                                                       விடாது சிரிப்பு                                                                                                                     சிரி சிரி கிரேஸி

இவற்றைத் தவிர விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகளில் இவர் எழுதிய தொடர் நாடகக் கதைகள் சிரிப்பை அலை அலையாகக் கொண்டு சேர்க்கும்.  அவற்றுள் முக்கியமானவை இரண்டு.

ஒன்று சிரிப்பு ராஜ சோழன்.  மற்றொன்று  கலிகால கரிகாலன்.

கலிகால கரிகாலனை அவரது crazymohan.com  என்ற அவரது வலைப் புத்தகத்தில் காணலாம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.