நான் ஒரு பருவ மழை.
பொறுத்து, புலம்பி, பூசை செய்து , வசை பாடி வையம் அழைக்கும் வேளைகளில்
புதிராய், பூதமாய் , புரியாத மாயமாய் , கசையடிக்கும் மசியாத கள்வனென நின்றாலும்
இந்தக் காசினிக்கா தெரியாது?
நான் புனலாய் ,புது வெள்ளாமாய், பூரிப்புடன் பொங்கிப் பிரவாகிக்கும்போது,
என்னைக் கூவி அழைத்தவரும்
கொஞ்சி விளித்தவரும் அஞ்சிச் சொல்ல வேண்டுமே
உன் கரை தாண்டும் வெள்ளம் கருணையல்ல கொடுமையே
போதுமடா சாமி தாங்காது பூமி!
நான் ஒரு பருவ மழை!
என் கவிதை மனம் இன்று விழித்துக்கொண்டது. இடியும் மின்னலும் மழைக்கு அறிகுறியென்றால் உங்கள் எழுத்துக்கள் என்னை எழுப்பி விடும் மின்னல்கள்.
மீண்டும் பேசும் வரை …. குடையை பத்திரப் படுத்துங்கள்
வானக்கரும் சூல்பையினுள்ளே
வளரும் மழை அமுதக் குழந்தை உதைக்க,
அதைப் பொறுக்காமல் நீ முனகுகின்ற,

மின்னல் வெளிச்சம் மிளிர, இடியோசை எங்களுக்கு என்று கேட்கும்?
கைச்செலவைப் பற்றி, கடவுள் டாக்டர் பீசைப் பற்றிக் கவலைப்படாதே.
தேவாரமும், திருமந்திரமும் அவருக்குப் போதும்.
உன் வயிற்றைக் கிழித்து வந்து எங்கள் வயிற்றில் பால் வார்க்கின்ற நாள் அதிக தூரம் இல்லை என்று நம்பியே இதை முடிக்கின்றோம்.
இப்படிக்கு,
நன்றி மறவாத மண்ணுலகினர்.
நான் ஓர் நடிகன்
வேஷங்கள் பல போட்டு
பொய்ம்முகங்களால்
நிஜ முகம் மறைக்கின்றேன்.
என்னைத் தரிசித்தவர்
முழுமையாக , உண்மையாக
என்னைத் தவிர வேறு யாருமில்லை
என்னைத்தவிர எனக்கு விரோதிகள் யாருமில்லை.
எனக்கு என்மேல் காதலும் உண்டு.
காத்திரமும் உண்டு.
என் பன்முக நானில்
நீங்கள் அறிந்த நான் யார்?
நல்லவனா, கெட்டவனா?
உண்மையில் நல்லவனாய்க் காட்டிக்கொள்ளும் கெட்டவன்.
வேஷங்கள் பல போட்டு
பொய்ம்முகங்களால்
நிஜ முகம் மறைக்கின்றேன்.
என்னைத் தரிசித்தவர்
முழுமையாக , உண்மையாக
என்னைத் தவிர வேறு யாருமில்லை
என்னைத்தவிர எனக்கு விரோதிகள் யாருமில்லை.
எனக்கு என்மேல் காதலும் உண்டு.
காத்திரமும் உண்டு.
என் பன்முக நானில்
நீங்கள் அறிந்த நான் யார்?
நல்லவனா, கெட்டவனா?
உண்மையில் நல்லவனாய்க் காட்டிக்கொள்ளும் கெட்டவன்.