அப்பா நாள் – ராதிகா பிரசாத்

*வாழ்க்கை*

சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
மலைத்து வாழ்வதல்ல வாழ்க்கை
பிறர் மலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை….
ஆர்ப்பரித்து வாழ்வதல்ல வாழ்க்கை
அர்ப்பணித்து வாழ்வதுதான் வாழ்க்கை….
நிதி நிலைக்க வாழ்வதல்ல வாழ்க்கை
நீதி நிலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை….
கோடிநாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை….
இருக்கின்ற பொழுது வாழ்வதல்ல வாழ்க்கை
இறந்த பின்பும் வாழ்வதுதான் வாழ்க்கை….!!!

ஓன்றுக்குள் ஒன்று…! — நித்யா சங்கர்

( சென்ற இதழ் தொடர்ச்சி )


அடுத்த நாள்… ‘விபரீதம் ஏதாவது நடந்தால் என்ன செய்வது என்று ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆபீஸிற்கு வந்து விட்டார் பரந்தாமன். மெதுவாக எல்லா ஸ்டா·பும் ஆபீஸிற்கு வந்தார்கள்.

பத்து மணிக்குத் தன் செக்ரடரியைக் கூப்பிட்டார்.

மோகனா .. நம்ம ஆபீஸ் அன்டு ·பாக்டரி அட்டென்டன்ஸ் எப்படி இருக்குன்னு செக் அப் பண்ணி சொல்லு..’என்றார்.

மோகனா வெளியே போய் யார் யாருக்கோ ·போன் பண்ணி தகவல்களை சேகரித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

ஸார்.. அன்டென்டன்ஸ் ஆஸ் யூஷ்வல் ஸென்ட் பெர்ஸென்ட் ஸார்…”

வாட்..?’ ஆச்சரியமாகப் பார்த்தார் பரந்தாமன்.

ஸார்.. அப்புறம் ஒரு விஷயம்.. நம்ம கம்பனி காம்பௌண்டுக்கு வெளியே நம்ம ஸ்டாபுடைய மனைவி-மார்கள் சில பேர் ‘எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ என்று போர்டு வைத்துக் கொண்டு
உண்ணாவிரதம் இருக்காங்க… நம்ம டைரக்டர்ஸ் வீட்டுலேயிருந்தெல்லாம் டெலி·போன் வந்தது.. அவங்க வீட்டு முன்னாலேயும் இதே போல பெண்கள் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்காங்களாம்’

‘வாட்.. போலீஸிற்குத் தகவல் சொன்னீங்களா..?’

‘போலீஸிற்கு இன்·பார்ம் பண்ணியாச்சு.. அவங்க கூட இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருக்காங்க, கலாட்டா ஆனா தடுப்பதற்காக. ஆனா அந்த பெண்கள் சத்தமோ கூச்சலோ போடாம அந்த போர்டை மட்டும் வெச்சுக்கிட்டு ஏதோ பத்திரிகைகளையெல்லாம் புரட்டிப் பார்த்துட்டு உட்கார்ந்துண்டிருக்காங்க. சில பத்திரிகைக்காரங்க
அவங்களப் பார்த்து விசாரிச்சுட்டு போறாங்களாம். நாளைக்கு பேப்பர்களில் இதே நியூஸா இருக்கப் போறது

‘ஓ ஷிட்… சரி.. சரி.. நீ போ’ என்றார் எரிச்சலோடு.
‘ஸார்.. உங்களைப் பார்க்க நம்ம கஸ்டமர் ஒருத்தர்வந்துருக்கார்’

‘சரி.. வரச் சொல்..’

‘நமஸ்காரம்…’ என்று சொன்னபடியே எதிரே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார் அந்த கம்பனியின் நீண்ட கால கஸ்டமர் சச்சிதானந்தம்.

‘எஸ்.. மிஸ்டர் சச்சிதானந்தம்.. எப்படி இருக்கீங்க?.. என்ன விஷயம் சொல்லுங்க..’என்றார் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு.

‘ஸார்.. நான் வந்த வேளை சரியில்லை போலிருக்கு..இத்தன வருஷமா இல்லாம நம்ம கம்பனிக்கு முன்னாலே உண்ணாவிரதம்… இந்த லேபர் பிராப்ளம் எப்பத்தான் தீருமோ..? எனிவே நான் வந்த வேலையைச் சொல்-
லிடறேன். நான் ஒரு ஆர்டர் கொடுத்திருந்தேன் இல்லையா.. அதன் ஸப்ளை ஏப்ரலில்தான் டியூ.. பட், எனக்கு அது கொஞ்சம் முன்னால் கிடைத்தால் தேவலை..ஸே.. இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் பதினஞ்சாம் தேதிக்குள் கிடைத்தால் பரவாயில்லை..’

‘பார்க்கறேன்.. சச்சிதானந்தம்.. நீங்கதான் பார்த்தீங்களே.. நான் செக்கப் பண்ணி நாளைக்குச் சொல்றேன்..’

‘இந்தப் போராட்டத்தோட கிரேவிடி எனக்குத் தெரியாது.. ஏப்ரல், மே மாத சப்ளைகளெல்லாம் கரெக்டா வந்துடுமான்னு பார்த்துச் சொல்லுங்க..
இல்லேன்னா, நான் ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் பண்ணியாகணும்’ என்று எழுந்தார் சச்சிதானந்தம்.

‘ஓகே..’ என்றார் பரந்தாமன் எரிச்சலை வெளிக்காட்டாமல்.

ஒருவர் ஒருவராக டைரக்டர்களிடமிருந்து ·போன் வர ஆரம்பித்தது பரந்தாமனுக்கு. ஒரு குடும்பமா, ஒண்ணுக்கு ஒண்ணா இருந்துட்டு இவ்வளவு நாள் கம்பனி முன்னேற்றத்திற்காக பாடுபட்டுட்டு முதுகிலே குத்திட்டான் பார் அந்த ரவி..அந்த சச்சிதானந்தம் இனி சப்ளையெல்லாம் ரெகுலரா வருமான்னு கேட்கறார்… டிஸ்கிரேஸ்·புல்.. ‘ என்று தன் வீட்டில் மனைவியிடமும், மகளிடமும் கத்திக்கொண்டிருந்தார் பரந்தாமன்.

‘அப்பா.. இன்னிக்கு நைட் நியூஸிலே அஸோஸியேஷன் லீடர் ரவியின் இன்டர்வியூ இருக்காம்’ என்றாள் அவர் மகள் புவனா.

‘டாம்மிட்… அதைப் போய் என்னப் பார்க்கச் சொல்றியா..?’

‘ அப்பா.. கூல்..கூல்.. அவர் என்னதான் சொல்றார்னு கேட்போமே.. ஆஸ் அ மானேஜிங் டைரக்டர் உங்களுக்குப் பொறுமை வேண்டாமா அப்பா.. அவர்
சொல்றதைக் கேட்கறதாலே நமக்கு என்னப்பா நஷ்டம்..?’

‘சரி.. சரி.. பார்க்கலாம்’

புவனா டி,வி.யை ஆன் செய்தாள். நியூஸ் வந்து கொண்டிருந்தது. ரவி டி.வி. யின் திரையில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

‘மிஸ்டர் ரவி.. வணக்கம்.. தொழிலாளர்களின் டிமாண்ட்ஸை மானேஜ்மென்ட் ஏத்துக்கலேன்னா வேலை நிறுத்தம், கதவடைப்பு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம். இது என்ன புதுமையான போராட்டம்?
உங்க ஸ்டா·பெல்லாம் வேலையில் இல்லா மனைவிமாரையும், மகள்களையும் உங்க கம்பனி ஆபீஸ், ·பாக்டரி, கம்பனி டைரக்டர்ஸ் வீடுகளுக்கு முன்னால் உண்ணாவிரதம் செய்ய வைத்திருக்கிறீர்கள்.. அதுவும் கூச்சலில்லை,கோஷமில்லை… ‘கோரிக்கைகளை நிறைவேற்று’ என்ற போர்டுகளை மட்டும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆண்களாகிய நீங்களெல்லாம் கம்பனிக்குள் சென்று வேலை செய்திருக்கிறீர்கள்;;; ? என்றார் நிருபர் புன்னகையோடு.

 

‘எங்களுடைய உழைப்பினால் உருவானது இந்தக் கம்பெனி. இன்னிக்கு பொருள்களின் தரத்திலாகட்டும், விற்பனையிலாகட்டும், நிகர் லாபத்தி லாகட்டும் முதல் இடத்தில் இருக்கிறது. எங்க கம்பெனியின் உற்பத்தி
பாதிக்கப்பட்டால் அது இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும், ஏற்றுமதியைப் பாதிக்கும். அப்படிப்பட்ட கம்பெனியின் சரிவிற்கு நாங்கள் காரணமாக இருப்போமா..? ஒரு போதும் மாட்டோம்.. எங்களது கோரிக்கைகள் – எங்களைப் பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகள் – எங்களுக்கும், எங்கள் மானேஜ்மென்டுக்கும் உள்ள பிரச்னை.. ஒரு குடும்பச் சண்டை மாதிரி.. அதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்..”

‘நீங்கள் முழுமனதாக ஒத்துழைப்பு கொடுத்து, உற்பத்தி குறையாது பார்த்துக் கொண்டால், உங்கள் கம்பனி மானேஜ்மென்ட் உங்கள் டிமாண்டை அக்கறையோடு பரிசீலித்து ஒத்துக் கொள்வார்கள் என்று
நினைக்கிறீர்களா..? அவர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவரை அவர்கள் அப்படியே ஒதுங்கி அலட்சியமாக இருந்து விடலாமில்லையா..?

‘ஒரு சில முதலாளிகள் அதுமாதிரி இருக்கலாம். எங்கள் முதலாளிகள் எங்கள் கூடப் பிறவா சகோதரர்கள் மாதிரி.. எங்களுடனேயே வளர்ந்-
தவர்கள். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை – அவை கம்பெனியின்  உற்பத்தியை, விற்பனையை, லாபத்தை எந்த விதத்திலேயும் பாதிக்காது என்று புள்ளி விவரத்துடன் கூறி இருக்கிறோம்… அவர்களுக்கும் சிறிது டைம் வேண்டும் அல்லவா..? சிந்தித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரம் வாங்கிய நாடு இது.. சாத்வீகப் போராட்டத்திற்கு உள்ள பலம் வயலன்ஸிற்குக் கிடையாது.. உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் மனைவிமார்களுக்கும் புள்ளி விவரத்தோடு எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தைச் சொல்லி இருக்கிறோம். அவர்கள் எங்கள் டைரக்டர்களின் மனைவிமார்களிடம் நிச்சயமாக டிஸ்கஸ் செய்திருப்பார்கள். டைரக்டர்களின் மனைவிமார்கள் எங்கள் பக்கம்தான் இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த முறையிலும் எங்கள் மானேஜ்மென்டுக்கு பிரஷர் இருக்கிறது..

‘அதாவது மதுரையைப் பிடித்தால் சிதம்பரம் தானாக தலையாட்டும்னு சொல்றீங்க’

மெலிதாகச் சிரித்தான் ரவி.

‘உங்களுடைய போராட்டம் – நூதனமான போராட்டம்- இப்போது நாடு முழுவதும் பிரசித்தமாகி விட்டது. இதனால் உங்களுடைய கஸ்டமர்ஸ்
உங்களை விட்டுப் போகலாமல்லவா..? இது உங்கள்  கம்பெனிக்கு அட்வர்ஸ் பப்ளிஸிடி இல்லையா?’

‘இல்லை.. அப்படி நான் நினைக்கவில்லை.. நீங்கள் எங்கள்  கம்பெனிக்குக் காலணா செலவு இல்லாமல் நல்ல பப்ளிஸிடி தேடிக் கொடுத் திருக்கிறீர்கள்.. இந்த இன்டர்வியூ மூலம் எங்கள் கஸ்டமர்ஸ¤க்கும், ஜெனரல் பப்ளிக்குக்கும் எங்களால் – எங்கள் போராட்டத்தால் –
எங்க  கம்பெனியின்  உற்பத்திக்கோ, விற்பனைக்கோ ஒரு பங்கமும் வராது என்று புரிந்திருக்கும். என்னால் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமா சொல்ல முடியும். எங்களது நீண்ட கால கஸ்டமர் ஒருத்தர் இன்று எங்களது எம்.டி.யை அணுகி, ‘நாங்கள் ஏப்ரலில் சப்ளை செய்ய
வேண்டிய சில ஐட்டங்களை மார்ச் பதினஞ்சாம் தேதிக்குள் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். நாச்சுவரலி எங்கள் எம்.டி. ஒன்றும் சொல்ல முடியாது நாளை சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது தெரிய வந்த நான் அவரைத் தொடர்பு கொண்டு எங்கள் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவரது சப்ளைகள் ரெகுலராக இருக்கும். அவர் விரும்பியபடியே ஏப்ரலில் சப்ளை செய்ய வேண்டிய ஐட்டங்களையும் எம்.டி.யிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு சப்ளை செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தேன்

‘இட் ஈஸ் வெரி கிரேட்…. உங்களை மாதிரி தொழிலாளர் தலைவர்கள் இருந்தால் எல்லாக்  கம்பெனிகளும் செழிப்பாக இருக்கும். ஆமாம்.. உங்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி உங்கள்  கம்பெனி காம்படிடர்ஸ் உங்களை அவர்கள் பக்கம் இழுக்க டிரைபண்ணலியா..?’

‘செய்தார்கள்.. செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன், எங்கள் திறமையையும், இனீஷியேடிவையும் பார்த்து ,நாங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தை விட இருமடங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் நாங்கள் எல்லாம் எங்கள்  கம்பெனிக்கு கமிடெட் ஸ்டா·ப்… ஸோல்ஜர்கள்.. அவர்கள் என்ன கொடுத்தாலும் போக மாட்டோம் எங்கள் கம்பெனி மானேஜ்மென்ட் எங்களை வெளியே அனுப்பினால் ஒழிய.
எங்களது டைரக்டர்கள் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து ஒரு நல்ல பதில் சொல்வார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறோம். நன்றி..

ரவி டி.வி. ஸ்கிரீனிலிருந்து மறைந்தான். புவனா டி.வி யை ஆ·ப் செய்தாள்.

பரந்தாமன் கண்களில் கண்ணீர். ‘ரவி புள்ளி விவரங்களோடுதானே கேட்டான். அவன் கேட்டவற்றில் நியாயம் இருக்கிறதே. நாம் கோரிக்கைகளை ஒத்துக்கொண்டுதான் பார்ப்போமே..’

அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. மற்ற டைரக்டர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச டெலிபோன் நம்பர்களைச் சுழற்ற ஆரம்பித்தார்.

 

 

கோழியக் கேட்டுட்டா மசாலா அறைப்பாக -சுரா

இருட்டென்றால் அப்படி கும்மிருட்டு
அமாவாசைக்கு அடுத்த நாள் இன்னிக்கி
இருப்பதோ பட்டிக்காடு மின் தடையும் வேற
ராந்தலும் வெளக்கும் அவிஞ்சு மணி மூணாச்சு      

காலையில சரியா கூவிச்சு வெடக்கோழி
ஆறு அஞ்சு  மணியைப்  பாத்ததுமே  மூடிக்கிச்சு
மதியம்   சாப்பாட்டுக்குக்   கோழி தயாராச்சு 

 

கோழியக் கேட்டுட்டா மசாலா அறைப்பாக
உறிச்ச நாட்டுக்கோழி தளதளன்னு கொஞ்சிச்சு 
மணக்க மணக்க மாமியா அறைச்சுத் தர
குலுக்கிக் குலுக்கிக் கொழுந்தியா கொதிக்கவைக்க
எட்டூருக்குக் கேட்டுச்சு நாட்டுக்கோழி வாசம்

தலை வாழை இலை போட்டு அள்ளி அள்ளி வச்சாக
வாயைத் தொறந்தாக்கா காக்கா கொத்தும் வரை
மாமனும் பிடி பிடிச்சேன் முட்ட முட்டத் தின்னுப்புட்டேன்
ராத்திரி ஆனதும் ஒருக்களிச்சு எழுந்திருச்சேன்                                             வயித்துக் கோழிக்கு றெக்கை முளைச்சிடுச்சு   
குறுக்கும் நெடுக்குமா முட்ட முட்டத் தொடங்கிச்சு                           பரக்கப் பரக்க நானும் இடந்தேடி ஓடிப்போனேன்

 

 

 

 

 

 

 

இருட்டே நல்ல துணை தனியிடமே செம  சொகம்
கிருட்டுக்கிருட்டுன்னு  சுவத்துக்கோழி கத்திச்சு  
சளக்கு சளக்குன்னு கறுப்புப் பண்ணி பொறளுது 
உஸ்உஸ்ஸுன்னு கரும் பாம்பு நெளியுது 
கீக்குக்கீக்குன்னு சொறித் தவளை கத்திச்சு  
வழ்வழ்ழென்று கிழ நாய் ஊளையிட  
பாம்போ பண்ணியோ நாயோ தவளையோ
என் அவசரம் எனக்கு வேறெதுவும் தெரியலே
முள்ளளுச்செடிகிட்டே முட்டுக்குத்தி உக்காந்தேன்
கடனையெல்லாம் முடிச்சிபுட்டு காலார நடைநடந்து
தேங்கிக் கிடக்கும் பள்ளத்துக் குட்டையில்
காலைக் கழுவி  இடக்கர் அடக்கல் முடித்தேன்
மாப்பு தான் நானும்  ஆனாலும்   தமிழ் வாத்தி .

இலக்கிய வாசல் -அறிவிப்பு – 23 ஜூலை , 20 ஆகஸ்ட் நிகழ்வுகள்

குவிகம் இலக்கிய வாசலின் .இந்த மாத நிகழ்வு  “கதை கேளு – கதை  கேளு” என்ற தலைப்பில் கதை சொல்லும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. 

தேதி          : ஜூலை 23, சனிக்கிழமை
நேரம்        : மாலை 6 மணி
இடம்         : ஸ்ரீனிவாச காந்தி நிலையம்,
அம்புஜம்மாள் தெரு, ஆள்வார்பேட்டை.
பொருள்  : “கதை கேளு – கதை கேளு”

சென்ற ஆண்டு  ஜூலை மாதம் நடந்த ‘சிறுகதைச் சிறுவிழா’  நிகழ்வில் சிறுகதைகள் வாசிக்கப்பட்டன.

இம்முறை கதை படிப்பதற்குப் பதிலாக கதை சொல்லும் நிகழ்வாக அமையும்.

இதுவரை பதினைந்து ‘கதை சொல்லிகள்’ உங்களுக்காகக்  கதை சொல்லத் தயாராக இருக்கிறார்கள்! 

அனைவரும் வருக !

 

அடுத்த மாதம் ஆகஸ்ட் 20 சனிக்கிழமையன்று பிரபல எழுத்தாளர்                                             எஸ். ராமகிருஷ்ணன் குவிகம் இலக்கிவாசலுக்கு வந்து இன்றைய இலக்கியம் பற்றி உரையாற்றுகிறார் !  

( இடம் : டிஸ்கவரி  பேலஸ் புத்தக நிலையம், கே கே நகர் ) 

அனைவரும்  வருக !

 

 

இலக்கியவாசல் ஜூன் மாத நிகழ்வு

2016-06-20-PHOTO-00000009 2016-06-20-PHOTO-00000012குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான “வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்” 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச்  சாலையில் அமைந்திருக்கும் புதுமையான  ‘ஸ்பேசஸ்’ அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின் நோக்கம் பற்றியும் கூறி  அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

வேணுகோபால் அவர்கள் வாசித்த “தர்பன சுந்தரி’  எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது !. 

பேராசிரியர் சிந்தாமணியின் கவிதைகள்  நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன.

இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல் தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள்  சர்வ தேச வானொலி  மற்றும் பிராஜக்ட் மதுரை.

தாரிணி கணேஷ், கோமல் சாமிநாதன்  அவர்களின் இலக்கிய இதழ் “சுபமங்களா”   வெளியிட்ட படைப்புகளை  இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும்  இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று  தெரிவித்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது.

புத்தகமா  இ- புத்தகமா ?  என்ற கேள்வி எழுந்தாலும் அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும்  இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது . 

இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டார்.

நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இந்த விழாவின் விவாதங்களின் முழு விவரமும் காண கீழே கொடுத்துள்ள இலக்கியவாசலின் வலைப்பூவிற்குச்  செல்லுங்கள்!! 

http://ilakkiyavaasal.blogspot.in/2016/07/blog-post.html

சித்திரமும் புதுக்கவிதையும் – உமா பாலு

IMG_0898 (1)
IMG_0961

 

இரவு  நேர  பூபாளம் Displaying 2016-07-06 09.39.44.png

 

pic2

கால் பதித்து ஏறுகையிலேயே
காணாமல் போகும் மாயப்படிகள்
அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டு இருக்கையிலேயே
கவிழ்ந்து விழும் விமானங்கள்
சூரியனாய் மாறிய நட்சத்திரங்கள்
தீபாராதனை காண்கையிலேயே கால் கை அசைக்கும் கடவுள்கள்
படித்துக்கொண்டு இருக்கும்போதே பறிபோகும் பக்கங்கள்
ஆசையுடன் விழுங்கப் போகையில் அருவமான அன்னம்
கால்கள் தரையில் பதியாமல் பறக்கிற நடை,
கீழே நழுவும் மலையும் வயலும் கடலும் காடும்
குழந்தைகளாய் வளைய வரும் வளர்ந்த பிள்ளைகள்
முடிவில்லா பாதைகளும் ,மூடிய நுழைவுகளும்
எத்தனையோ வருடம்  கழித்து சந்தித்த தோழி
அருகே போனதும் அன்னியமாய்ப் போனது
அலுவலகம் செல்லும் வழியிலேயே அவிழ்ந்து விழும் உடைகள்
தேடி அவலமாய்த் தவிக்கும் பொழுதுகள்
சிரித்தபடி குசலம் கேட்டு உறவாடும் மரித்த உறவுகள் என
வண்ண வண்ணக் கனவுகளில் தோய்ந்த என் பின்னிரவுகளும்
அதிகாலைகளும்
என் இருப்பை நிறைப்பவை !

குட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்

வாட்ச் மேன்


என் நண்பனைப் பார்ப்பதற்காக, அவன் அபார்ட்மென்ட் முன்பு ஆட்டோவை நிறுத்தி, மனைவி மகளுடன் கீழே  இறங்கினேன்.

ஆட்டோ டிரைவருக்குப் பணம் கொடுப்பதற்காக பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொண்டே, ‘ரமா.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டேன்.

என் மகள் மிதிலா அந்த அபார்ட்மென்ட் கேட்டருகில் இருந்த வாட்ச் மேனிடம் போய், ‘அங்கிள்.. டைம் என்னாச்சு..?’ என்று கேட்டாள்.

அந்த வாட்ச்மேன், ‘பாப்பா.. அங்கிள்கிட்டே வாட்ச் இல்லே.. டைம் தெரியாதே..’ என்றான் மெலிதாக சிரித்துக் கொண்டே.

‘என்ன அங்கிள்..? உங்களிடம் வாட்ச் இல்லை. பின் ஏன் உங்களை எல்லோரும் வாட்ச்மேன்  என்று கூப்பிடறாங்க..?’ என்றாள் மிதிலா.

வாட்ச்மேனுடன் நாங்களும் திகைத்து நின்றோம்!.