மண்ணையும் அதன் வாசனையையும், அந்த வாசனை இழையோடும் மனிதர்களையும் தொலைத்து, வெவ்வேறு ஊர்களில் பிழைப்புக்காகத் திரியும் அனைவருக்கும்..
மழை நின்ற பின்
ஏங்கும் நிலமாக,
நிலம் வறண்ட பின்
ஏங்கும் மண்ணாக,
மண் கரைந்த பின்
ஏங்கும் வாசமாக,
வாசம் மரித்த பின்
ஏங்கும் காற்றாக,
காற்று கலைந்த பின்
ஏங்கும் கூந்தலாக,
கூந்தலைத் தொலைத்த பின்
ஏங்கும் பேருந்தாக,
பேருந்தைக் காணாது பின்
ஏங்கும் நானாக,
என்னைக் கானாது பின்
ஏங்கும் என் அம்மாயியாக,
இச்சென்னை மாநகரிலேயே
நாமக்கலில் இருந்து ஓர்
இடம்பெயர்தல் கதை..
நாமக்கலில் இருந்து ஓர்
இடம்பெயர்தல் கதை..

Beautiful
LikeLike
Wonderful dude 🙂
LikeLike