( கருத்து – புலவர் வயித்தியலிங்கன் அவர்கள்)
விநாயகர் துதி
சுக்லாம்பரதரம் – வெண்மையான ஆடையை அணிந்தவர்
விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பவர்
சசிவர்ணம் – சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் – நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் – மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் – தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே – எல்லா தடைகளும் நீங்கட்டும்
காபி
சுக்லாம்பரதரம் – வெண்மையான ஆடை உடைய பாலில்
விஷ்ணும் – எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது
சசிவர்ணம் – டிகாக்ஷன் கலந்ததும் காபி சசிவர்ணமாகிறது – சந்திரன் நிறம் – பொன்னிறம்
சதுர்புஜம் – சூடான காபியை போட்டுத்தர இருகரங்கள் – (மனைவி?) + அதை ஆற்றிக் குடிக்க இரு கரங்கள்
ப்ரசன்ன வதனம் – குடித்த பின் ஏற்படும் மகிழ்ச்சியான திருமுகம்
த்யாயேத் – (காபியே) உன்னை தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே – அன்றைய நாள் எல்லா தடைகளும் நீங்கி சுலபமாக கழியட்டும்!
நாலைந்து வருடத்திற்கு முன்னால் அவ்வையார் அதியமானைத் தேடி தர்மபுரிப் பக்கம் போனபோது வழியில் ஒரு கையேந்திபவனில் கும்பகோணம் டிகிரிக் காப்பி குடித்துவிட்டுப் பாடிய பாட்டு இது!
பாலும் வெந்நீரும் டிகாக்ஷனும் சர்க்கரையும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – அருமையான
காப்பி என்ற அமிர்தத்தைக் குடித்தபின் நீயெனக்கு
ஹேப்பிஎன்ற சொல்லைத் தா.
( இது நம்மோட அதிகப் பிரசங்கித்தனம் )