படம்: நன்றி: ஆர்.பிரசாத்,திருவள்ளுவர் கார்ட்டூன் Economic Times South
திருவள்ளுவர் முதலில் இந்தமாதிரி தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்து எழுத முயற்சித்தாராம். அதற்குள் அவர் மதம் மாறிவிட்டதாலும் , இலக்கணம் கொஞ்சம் இடிக்குது என்ற காரணத்தினாலும் மாற்றி, தற்போது இருப்பதுபோல் எழுதி விட்டாராம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பிரம்மன் முதற்றே உலகு
கற்றதனால் ஆய பயனென்கொல் கணபதி
நற்றாள் தொழார் எனின்.
மலைமகள் ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
வேண்டுதல் வேண்டாமை இலாசிவனைச் சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா பரந்தாமன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொறிவாயில் ஐந்தெழுத்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்
தனக்குவமை இல்லாசிவன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
அறவாழி முருகன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தால் அரிது
கோளில் பொறியில் குணமிலவே எட்டெழுத்தான்
தாளை வணங்காத் தலை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
பரமனடி சேரா தார்