இலக்கியவாசல் நிகழ்வு – அக்டோபர் 2016

இணையத்தில் கோமலின்                ” சுபமங்களா” ………………..

fullsizerender-4

Image result for கோமல் சுவாமிநாதன்

 

திரு கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல்1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த        “சுப மங்களா ” வின் 59இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன

வெளியிடுபவர்  :                                                      திரு. திருப்பூர் கிருஷ்ணன்

முன்னிலை :                                                                                                                           கவிஞர்  வைத்தீஸ்வரன்

நாள் : அக்டோபர் 15, 2016               சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம்             P.S.உயர்நிலைப் பள்ளி             ராமகிருஷ்ணா மடம் சாலை     மயிலை சென்னை 600 004

sm1

 

sb3

 

sb2

 

கோமல் சுவாமிநாதன் (19351995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர்.

கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் சென்னையில் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 ல் அவர்களுக்காகப் ‘புதிய பாதை’ என்ற முதல் நாடகத்தை எழுதினார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் வசன உதவியாளராகப் பணியாற்றினார்.

1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடககுழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். .

1980ல் இவர் எழுதிய தண்ணீர் தண்ணீர் என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல்,  யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

இதழியல்

வாழ்க்கையின் கடைசியில், தன் நாடகக் குழுவைக் கலைத்து விட்டு இதழியலில் ஈடுபட்டார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார். சுபமங்களா தமிழில் மிகப் பெரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களைப் பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது

( நன்றி : விக்கிபீடியா )

கோமல் படைப்புகள்

சன்னதித் தெரு, 1971,
• நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),
• மந்திரி குமாரி, 1972,
• பட்டணம் பறிபோகிறது, 1972,
• வாழ்வின் வாசல், 1973,
• பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),
• ஜீஸஸ் வருவார், 1974,
• யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),
• அஞ்சு புலி ஒரு பெண், 1976,
• கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் “இலக்கணம் மீறிய கவிதைகள்” என வழங்கப் பெற்றது),
• ஆட்சி மாற்றம், 1977,
• சுல்தான் ஏகாதசி, 1978,
• சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),
• தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),
• ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),
• அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• நள்ளிரவில் பெற்றோம், 1984,
• இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• கறுப்பு வியாழக்கிழமை, 1988,
• நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),
• கிராம ராஜ்யம், 1989,
• மனிதன் என்னும் தீவு, 1989,
• அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,
பணியாற்றிய மற்ற படைப்புகள்,
• புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)
• டாக்டருக்கு மருந்து,
• கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )
• டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் “கற்பகம் வந்தாச்சு” என்ற பெயரில் படமாகியது),
• அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
• அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)
• கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)
• என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)

நவம்பரில் வர இருக்கிற தண்ணீர் தண்ணீர் நாடகத்திற்கான ஒரு டீசர்

[youtube https://www.youtube.com/watch?v=hsuLSfswulo&w=560&h=315

அக்டோபர் 15ஆம் தேதி  இணையத்தில் வெளிவந்துள்ள “சுபமங்களாவின்” இணையதளத்திற்குச் செல்ல :

http://www.subamangala.in/

நேர்மையே உன் நிறம் என்ன..? — நித்யா சங்கர்

Image result for school admission in chennai vijayadashami i

 

‘ஐ ஆம் ஸாரி மேடம்… நான் எத்தனை தடவை
சொல்றது? எங்க ரூல்ஸ்படி எல்.கே.ஜி. அட்மிஷனுக்குக்
குழந்தைக்கு மூன்று வருடம் பத்து மாதம் வயதாகி
யிருக்கணும். உங்க குழந்தைக்கு மூன்று வருடம் ஒம்பது
மாதம் தான் ஆகியிருக்கு. ஸோ.. ஒரு மாதம் ஷார்ட்.
அட்மிஷன் கொடுப்பதற்கில்லை..’ என்று அடித்துக் கூறினாள்
பிரின்ஸிபால்.

சுபாஷ் நகர் கான்வென்ட். தன் பெண்ணிற்கு அட்மிஷன்
வாங்குவதற்காகச் சென்றிருந்த சுமதி, பிரின்ஸிபாலின்
முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்-
திருந்தாள். அவள் பக்கத்தில் பிரமித்துப் போய் உட்கார்ந்-
திருந்தாள் அவள் தோழி வனஜா. பெயர் பெற்ற லேடீஸ்
கிளப்பின் பிரஸிடென்ட்.

‘ஸிஸ்டர்.. நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. இந்த ஒரு
மாதம் ஷார்ட்டேஜுக்காக அவளுக்கு ஒரு வருடம் வீணாப்
போய் விடும். நீங்க மனது வெச்சா கொஞ்சம் அட்ஜஸ்ட்
பண்ணலாம்..’ என்றாள் சுமதி தன்னை சமாளித்துக் கொண்டு
சிறிது கெஞ்சலாக.

‘என்ன நீங்க..? சொன்னதையே திருப்பித் திருப்பிச்
சொல்லிக்கிட்டு..? மூன்று மாதம் பத்து மாதம் முடிஞ்ச
குழந்தைக பல பேர் கியூவிலே நின்னுட்டிருக்காங்க… அவங்-
களுக்கெல்லாம் நான் அட்மிஷன் கொடுத்தாகணும்..”

இதுவரை பேசாமலிருந்த வனஜா, ‘ஸிஸ்டர்.. சுமதியுடைய
முதல் குழந்தை உங்க ஸ்கூலில்தான் படிக்குது.. ஸோ.. அவ
இரண்டாவது பெண்ணையும் இங்கேயே சேர்க்கப் பிரியப்-
படறா.. இரண்டு பேரும் சேர்ந்து ஸ்கூலுக்கு வந்துட்டுப்
போகலாம் பாருங்க..’ என்றாள் மெதுவாக.

‘ஐ ஆம் ஸாரி.. அதுக்கு நான் என்ன செய்யறது..? எங்க
ஸ்கூலிலே அட்மிட் பண்ணிக்க முடியாது.. வேறே ஏதாவது
ஸ்கூலிலே டிரை பண்ணிப் பாருங்க.. ஈ·ப் யூ ஆர் ஸோ
பர்ட்டிகுலர், பெரிய பெண்ணுடைய டி.ஸி.யையும் வாங்கிக்-
கிட்டு அந்தப் பள்ளிக் கூடத்திலியே சேர்த்துடுங்க. ஸோ..
ரெண்டு பெண்களும் சேர்ந்தே ஸ்கூலுக்குப் போகலாம்’
என்றாள் பிரின்ஸிபால் சிறிது எகத்தாளத்தோடும், இறுமாப்-
போடும்.

வனஜாவின் முகம் கோபத்தால் சிறிது மாறியது. சுமதி
நிதானத்தோடு இருக்கும்படி அவள் கையைப் பிடித்து
அமுக்கினாள்.

மேலெழுந்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
வனஜா, ‘ஸிஸ்டர்.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
நீங்கள் அட்மிஷன் கொடுத்துள்ள ஐம்பது ஸ்டூடண்ட்ஸில்
அட்லீஸ்ட் இருபது ஸ்டூடண்ட்ஸ்க்காவது நீங்க விதிச்ச
வயத விட கம்மியாத்தான் இருக்கும். அவங்க ·பால்ஸ்
பர்த் ஸர்டி·பிகெட் வாங்கிட்டு வந்து குழந்தைகளைச் சேர்த்தி
யிருக்காங்க.. ஆனா இந்த சுமதி ரொம்ப நேர்மையா குழந்-
தையின் சரியான பிறந்த தேதியைக் கொடுத்து பர்த் ஸர்டி-
·பிகெட் வாங்கிட்டு வந்திருக்கா.. பட், இந்த ஒரே ஒரு
மாத ஷார்ட்டேஜுக்காக எங்க குழந்தைக்கு அட்மிஷன்
இல்லை. இதைக் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா..?’
என்றாள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக.

‘அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நாங்க
ரெகார்டுபடிதான் போக முடியும்’ என்றாள் பிரின்ஸிபால்
முடிவாக.

சில நிமிடங்கள் யோசனையோடு உட்கார்ந்திருந்த
வனஜா, ‘ஸிஸ்டர்.. ஈ·ப் யூ டோன்ட் மைன்ட்.. கொஞ்சம்
டெலிபோனை யூஸ் பண்ணிக்கலாமா..? என்று கேட்டாள்.

‘ம்..’ என்ற பதில் வந்தது பிரின்ஸிபாலிடமிருந்து.

யாரிடம் பேசப் போகிறாள் என்ற திகைப்போடும்,
ஆவலோடும் உட்கார்ந்திருந்தாள் சுமதி.

டெலிபோன் நம்பர்களைச் சுழட்டிய வனஜா, சில
வினாடிகள் காத்திருந்து விட்டு, ‘ஹலோ.. ஆன்டி, எப்படி
இருக்கீங்க.. நான் வனஜா பேசறேன். ஸி. எம். இருக்காரா?
கொஞ்சம் கனெக்ஷன் கொடுக்கறீங்களா..’ என்று கூறிக்
காத்திருந்தாள்.

‘ஹலோ ஸார்.. நான் வனஜா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா? உங்க வெளி நாடு ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது..?’

‘ …. ‘

‘ஓ.. வெரிகுட்.. நான் இப்ப சுபாஷ்நகர் கான்வென்டி-
லிருந்து பேசறேன். ஒரு சின்ன பிராப்ளம்….’

‘ ….’

‘சேச்சே… அப்படி ஒண்ணுமில்லே.. ப்ராப்ளமில்-
லேன்னாலும் ·போன் பண்ணுவேன். இந்த ரெண்டு மாசமா
ஒரே பிசி.. என் பிரண்டு சுமதியுடைய ஸெகன்ட் டாட்ட-
ருக்கு அட்மிஷனுக்காக வந்தோம். ஆனா ஒரு மாசம்
ஏஜ் ஷார்ட்டேஜுங்கறாங்க..’

‘…..’

‘என்ன..? மூணு வயது நாலு மாதக் குழந்தைகளையும்
இவங்க சேர்த்துக்கிட்டிருக்காங்களா..? உங்களுக்கு
கம்ப்ளெயின்ட் வந்துருக்கா.. அப்போ ஏன் இந்தக்
குழந்தையை மட்டும் சேர்த்துக்க மாட்டேங்கறாங்க..?’

‘….’

‘சரி, நாங்களும் ரிப்போர்ட் பண்ணறோம்.. எஜுகேஷன்
மினிஸ்டருக்கு ஒரு லெட்டர் அனுப்பிச்சிட்டு உங்களுக்கும்
ஒரு காபி அனுப்பறோம்.. நாளைக்கு வந்து நான் உங்களைப்பார்க்கறேன்..’ என்று டெலி·போனை வைத்து விட்டு, ‘தாங்க்யூ ஸிஸ்டர்.. வா சுமதி போகலாம்..’ என்று எழுந்தாள் வனஜா

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த
பிரின்ஸிபாலின் முகம் வெளிறி யிருந்தது.

‘ஒரு நிமிஷம்.. நீங்க ஏன் ஸி. எம். லெவலுக்கு போயிட்
டீங்க..? ஸி. எம்.மைத் தெரியும்னு முன்னாலேயே சொல்லக்
கூடாதா..? இந்தம்மாவின் குழந்தைக்கு அட்மிஷன் கொடுக்-
கிறேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்.. ஸி.எம். கிட்டே சொல்லி
ஏதோ எங்க ஸ்கூலைப்பத்தி கம்ப்ளெய்ன்ட்ஸ்னு சொன்னீங்-
களே.. அதைப் பத்தி ஸிவியரா ஆக்ஷன் எடுக்காம பார்த்-
துக்கணும்’ என்றாள் பிரின்ஸிபால் அழாக் குறையாக.

வனஜா பெருமையோடு சுமதியைப் பார்த்துச் சிரித்துக்
கொண்டே அமர்ந்தாள்.

சுமதிக்கும், வனஜாவிற்கும் ராஜோபசார மரியாதை
நடந்தது.

குழந்தையின் அட்மிஷன் ·பீஸைக் கட்டிவிட்டு
வெளியே வந்த சுமதி, ‘வனஜா இதுவரை எங்கிட்டே நீ
சொன்னதேயில்லையே, உனக்கு ஸி. எம். மைத்
தெரியும்னு. நீ இந்த ஏரியாவுலேயே பெரிய லேடீஸ்
கிளப் பிரஸிடென்ட்னு தெரியும்.. அதனால்தான் நானே
உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆனா உனக்கு
சீ·ப் மினிஸ்டரைத் தெரியும்னு தெரியாது..’ என்றாள்.

வனஜா கடகடவென்று சிரித்தாள். ‘சீ·ப் மினிஸ்-
டரையாவது… தெரியறதாவது.. ஏதோ ஒரு நம்பரைச்
சுழற்றினேன். எங்கேஜ்ட் ஸவுன்ட் வந்தது. சீ·ப்
மினிஸ்டர் கிட்டே பேசற மாதிரி ஒரு டயலாக். அவ்வளவு-
தான். உன் பெண்ணுக்கு அட்மிஷன். இந்தக் காலத்துலே
நேர்மைக்கும், உண்மைக்கும் விலையே இல்லே..’

திகைத்து நின்றாள் சுமதி.

நேர்மையே உன் நிறம் என்ன…?

 

 

சட்டத்தில் எப்படி ஓட்டை போடுவது? – சாய்

 

சில  விசித்திரமான வழக்குகள்:

பாராசூட் எப்போதும் நாம் தலைக்குத் தடவுகிற தேங்காய் எண்ணை தானே. ஆனால்  தயாரிப்பாளர்கள் அதை  வெறும்  தேங்காய் எண்ணை என்று தான் விளம்பரப்படுத்துவார்களே தவிர, தலைக்கு உபயோகிக்கும்                                                 ஹேர் ஆயில் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் உணவுப் பொருளாக உபயோகிக்கும்  தேங்காய் எண்ணைக்கு எக்ஸைஸ் வரி கிடையாது. ஹேர் ஆயிலுக்கு உண்டு. இன்னொரு அட்வான்ஸ்டு பாராசூட் எண்ணை என்று ஒன்று உண்டு. அதை  ஹேர் ஆயில் என்று சொல்கிறார்கள். அதுக்கு எக்ஸைஸ் வரி உண்டு.  இப்போ புரியுதா?

அரசாங்கம் என்ன செய்தது தெரியுமா? 200 மில்லிக்குக் கீழே  தேங்காய் எண்ணை இருந்தால் அது ஒப்பனைப் பொருளாகக் கருதப்படும் என்றும் அதற்கான  எக்ஸைஸ் வரி கட்டவேண்டும் என்றும் அறிவித்தது.

பாராசூட்  தயாரிப்பாளர்கள்   இதை எதிர்த்து அப்பீல் சென்று வெற்றி அடைந்தார்கள். அதனால் பாராசூட் தேங்காய் எண்ணயை நம் தலையில் மட்டுமல்ல அரசாங்கத்தின் தலையிலும் தடவுகிறார்கள்!

 

தெரு – அழகியசிங்கர்

நான் எங்கே? – எஸ் எஸ்

 

Image result for old broken cycle sketch

என் இரு சக்கர வாகனம் நின்றுவிட்டது.

இத்தனை நாள் இருந்து  வந்த எங்கள் தோழமை முடிந்துவிட்டதா?

மக்கர்  செய்ததும் கொஞ்சம் தட்டிக் கொடுத்தவுடன்  புறப்படுமே, அது மாதிரித் தற்காலிக வேலை நிறுத்தமா? இல்லை, முற்றிலும் பழுதாகிவிட்டதா?

இயந்திரக் கோளாறா ? இயக்கக்  கோளாறா?                                                 காற்றுப் போய் விட்டதா? தீனி தீர்ந்துவிட்டதா?                                            நரம்பு தெறித்து விட்டதா? துடிப்பு நின்றுவிட்டதா?                                      முகம் கோணிக்கிடக்கிறது. உருவமே மாறிப்போய் விட்டது.

வெளிச்சமே இல்லை. எல்லா ஓட்டைகளிலிருந்தும் பிசிக் பிசிக்கென்று ஏதேதோ வழிகின்றன.

இதை என் அம்மா அப்பா தான் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்.  எவ்வளவு சீராட்டல்கள்? பாராட்டல்கள் ?

திருமணமானதும் என் மனைவிக்குத்தான் இதன் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசை. அவள் இதைக் கொஞ்சித் தழுவும் போது எத்தனை ஆனந்தம்? மகிழ்ச்சி? சந்தோஷம்? குதூகலம்?

என் மகனும் மகளும் இதில் பவனி  வரும்போது புதிதாக ஒன்று தெரிந்ததே ? அது  என்ன? ஓ ! அதுதான் சொர்க்கமா?

இன்று,

இதைத் தூக்கி எறிந்துவிடு என்று எல்லோரும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

என்னைவிட,  இதனால்,  இவர்களுக்குத் தான் கஷ்டம் அதிகம் போலிருக்கிறது.

இத்தனை காலம் இதனுடன் பழகிய எனக்கு இதைத் தூக்கி  எறிவது அவ்வளவு  சுலபமாயில்லை. முடியவும் முடியாது. முடியவே முடியாது.

என் மகன் வந்தான். ” நீ தானடா அதனை எடுத்து எறிய வேண்டும்” என்று எல்லோரும் அவனிடம் சொன்னார்கள். அதனை   அப்படி எறிய விடுவேனா?

என் மகள் வந்தாள். அவள் கண்ணீர் அதன் மேல் பட்டது. இனி அது கண்ணீருக்கும் தகுதியற்றது என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது .

கட்டின மனைவி வந்தாள்.அவளுக்குத் தானே அதன் மேல் முதல் உரிமை. துயரம் கண்ணில் தெறிக்க அதைக் கட்டிப் பிடித்து அழுதாள். பிறகு உண்மையின் நிதர்சனத்தைப்  புரிந்து கொண்டாள் .

மற்ற உறவினர்கள் எல்லாரும் வந்தார்கள். ‘இது இப்படித்தான். என்றைக்காவது வாய் பிளக்கும் ‘ என்று ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டு  புறப்பட்டார்கள். 

எனக்கே புரிந்துவிட்டது. அதன் துடிப்பு மட்டுமல்ல இயக்கமும் நின்றுபோய் விட்டது.

Image result for old broken cycle clipart

நேரமாகிவிட்டது. மணி அடித்தாகி  விட்டது. எங்கோ ‘ஊ’ என்று ஊளையிடும் ஓசை கேட்கிறது. நாலு பேர் அதைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

அதில்லாமல் நானா?

நான் எங்கே?    

 

தீவு பிறந்த கதை – ஸர்ட்ஸீ(SURTSEY) – ராமன்

உலக வரைபடத்தில்  இல்லாத நிலப்பரப்பு  திடீரென்று கடல் அடிமட்டத்திலிருந்து மேலே முளைத்தது –  புதிய தீவு ஒன்று பிறந்தது!!

தீவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஸர்ட்ஸீ (surtsey).

பிறந்த வருடம் 1967ல்.

இடம் ஐஸ்லாண்ட் நாட்டின் தென்கோடி எல்லை.

pic1pic2

 

 

 

 

       ஆரம்ப காலத்தில்                             15 நாட்களுக்குப் பிறகு


 pic3pic4

ஸர்ட்ஸீ தீவு                                   ஐஸ்லாண்ட் – தென்கோடியில் ஸர்ட்ஸீ

 

வட அட்லாண்ட்டிக் கடலில்  மட்டத்திலிருந்து கீழே 130 மீட்டரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தரை மட்டத்திற்கு நவம்பர் 1963ல் வெளிவந்து 1967 ஜூன் வரை நீடித்தது.  2.7 சதுர கிமீ-ல் இருந்த நிலப் பரப்பு தற்போது அலை அரிப்பினால் 1.3 சதுர கிமீ-ல் குறைந்து காணப்படுகிறது.

 ஸர்ட்ஸீயின் பெயருக்கு, இயற்கையை வழிபட்டு வந்த பழங்கால ஸ்காண்டினேவியாவின் நார்ஸ் மிதாலஜியில்  அனல் அல்லது பூதத்  தீவு என்று பொருள்.

முதலில் எரிமலையின் மூன்று வாய்கள் மூலமாக ஏற்பட்ட வெடிப்புகள் கடைசியில் ஒன்றாக இணைந்து இந்த தீவு உருவானது. 130 மீ கடலுக்கு அடியில் சாதாரணமாக ஏற்படும் வெடிப்புகள் பல திசைகளில் சிதறி தண்ணீர் அழுத்தத்தினால்  நனைக்கப்பட்டு பரவி விலகிவிடும். தொடர்ந்து  வெடிப்புகள் நீடித்தால் அதன் மூலமாய் வெளிவரும் உருகிய உலோகக் கலவைகளினால் மேடுகள் கிளம்பும். வெடிப்புகளினால் கட்டுப்படுத்த இயலாத மேடுகள் பெரிதாகிப் பெரிதாகி  கடல் மேல் மட்டத்திற்கு மேலே வந்துவிடும்.

1964ம் ஆண்டில் தண்ணீர் கலவையினால் நிகழ்ந்த வெடிப்புகளின் வாய்களை தண்ணீர் வெகு எளிதில் செல்ல இயலாததால் எரிமலையின் வீரியம் குறையத் தொடங்கியது. அப்போது எரிமலை குழம்புகளின் ஊற்றுகள் மற்றும் ஆறுகளின் செயற்பாடுகள் தொடங்க ஆரம்பித்தன. இறுக்கமற்ற எரிமலை சாம்பல்களும், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பாறைகளும் எரிமலை குழம்புகளினால் மூடப்பட்டு  தீவு கடல் அலைகளினால் அடித்துக்கொண்டு போகவிடாமல் காப்பாற்றப்பட்டது. எரிமலை 1967 ஜூனில் சாந்தம் அடைந்தது. இப்போது வருடா வருடம் ஸர்ட்ஸீ 1.0 ஹெக்டேர் நிலத்தை இழந்து வருகிறது. இழந்த நிலம் எரிமலை குழம்பினால் மூடப்படாத இறுக்கமற்ற பாறைகளும் சாம்பல்களுமாகும்!  குழம்பினால் முற்றிலும் மூடப்பட்ட இத்தீவு மறைய இப்போது வாய்ப்பில்லை.

பல்லுயிர் பெருக்கத்தைப் (biodiversity) பற்றி ஆராய இத் தீவு முதல் நிலையான உதாரணம். பாறைகளில் 1967ம் வருட இறுதியில்   பாசி மற்றும் பூக்கள் இல்லாத செடிகளும் தென்பட ஆரம்பித்தன. 2008ம் ஆண்டு 69 வகையான செடி கொடிகள் தென்பட்டு கடைசியில் 30 மட்டுமே இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்தாபனமாயின. இடம் மாறும்(migratory) பறவைகள் தீவில் கூடு கட்ட ஆரம்பித்தன. இதனால் மண்ணின் தரம் உயர ஆரம்பித்தது. புதிய புதிய செடி இனங்கள் வருடத்திற்கு 5 வீதம் உண்டாகின்றன. பறவைகளின் பெருக்கம் தீவின் செடிகொடிகளின் பெருக்கத்திற்கு உதவின. இப்போது 12 வகையான பறவைக்  கூட்டங்கள் இங்கு கூடு கட்ட வருகின்றன. பஃபின், ஸீல் மற்றும் ஸ்டார் மீன்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து காற்றினால் தள்ளப்பட்டு மற்றும் அதன் பலத்தினாலேயே வந்த பறக்கும் பூச்சிகள், மரக்கிளைகளில் தங்கி மிதந்து வந்தவைகள், கரையில் ஒதுங்கிய கடலில் செத்த உயிரினங்கள் மூலமாகவும் இன்று 663 பூச்சிகள் முக்கியமாக உண்ணிகள் கணக்கிடப்பட்டுள்ளன.

pic5

pic6

 

பஃபின்                                                                          ஸீல்

ஆராய்ச்சியாளர்கள் வசிக்கும் குடில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தீவில் வாழ எவருக்கும் அனுமதி கிடையாது. ஐஸ்லாண்ட் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல இயலாது.

தற்சமயம்  UNESCOவினால் அங்கீகரிக்கப்பட்டு காப்பாற்றப்படும் தீவாக விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!