( குவிகம் இலக்கியவாசல் நிகழ்வில் படிக்கப்பெற்ற கவிதைகள் )
கவிதை #1 : அலையே
பால்எனஎண்ணி கால்கள் நனைத்தாள் நுரையாய் வந்தது அலையே
நின்ற இடத்தில கால் தடம் பதித்தால் மண்ணால் புதைப்பதும் அலையே
புதைந்த காலை வெளியே எடுத்தால் சுத்தம் செய்வதும் அலையே
விட்டுச் சென்ற கால் தடம் எல்லாம் மறைக்கும் வரும் புது அலையே
அலையே நிரந்தரம் என்று நினைத்தால் மறைந்தது கால் தொட்ட அலையே
நிரந்தரமானது எதுவென பார்த்தால் முடிவில்லா பெரும் கடலே
அந்த கடல் போல் காதல் உணர்வே அந்த அலை போல் வரும் பல உறவே
கவிதை #2 இல்லாததை இழக்கின்றாய்
மண்ணில் பிறந்தாய் கருவை மறந்தாய் முன்னை மறந்த நீ உன்னை இழக்கிறாய் இருக்கும் உலகத்தில் எதற்கு உழைக்கிறாய் எதிர்காலத்திற்கென்று உண்மை மறைக்கிறாய் ஏற்க மறுக்கிறாய் உடல் உருகும் என்பதை உயிர் விலகும் என்பதை வாழ்வு தொடரும் என்பதை மரணம் இல்லை என்பதை ஏன் ?
நீயே இல்லை என்பதை ஏற்க மறுத்து உண்மை மறைத்து இல்லாததை இழக்கின்றாய்
கவிதை #3 உண்மை உலகை சேர வா
எல்லை ஒன்று எங்கும் இல்லை உன்னை நீயே அடைத்துக் கொண்டாய் வீடு என்றொரு சிறையினிலே உறவு என்றொரு விலங்காலே உன்னை நீயே அடைத்துக் கொண்டாய் ஊரு என்றொரு சிறையினிலே நட்பு என்றொரு விலங்காலே உன்னை நீயே அடைத்துக் கொண்டாய்
நாடு என்றொரு சிறையினிலே பற்று என்றொரு விலங்காலே உன்னை நீயே அடைத்துக் கொண்டாய் உலகம் என்றொரு சிறையினிலே காதல் என்றொரு விலங்காலே உன்னை நீயே அடைத்துக் கொண்டாய்
உலகம் தாண்டி கிரகங்கள் தாண்டி சிறையை நீயே வளர்த்துக் கொண்டாய் விடுதலை வேண்டும் என்று இருந்து வெளியே செல்ல வழிகள் தேடி வந்த வழியே மீண்டும் வந்தாய்
ஒன்பது வாசல் கொண்ட சிறையினில் வாழ்ந்தது போதும் திரும்பி வா உன் உலகம் உன்னில் திரும்பிபார் அதனை விட்டு சிறையில் வாழ்ந்து சுதந்திரம் என்று உலகம் என்று