கோமலின் தண்ணீர் தண்ணீர்
கோமல் 80 விழா 18 நவம்பர் மாலை நாரதகான சபாவில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.
திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, தமுஎகச துணைத்தலைவர் சிகரம் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினர்களாக உரையாற்ற, CPI (M) மானிலத்தலைவர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி உமாநாத் , தமுஎகச பொருளாளர் இரா.தெ.முத்து, மற்றும் உறுப்பினர்கள் பல பேர், சிந்தனையாளர்/எழுத்தாளர் ஞானி, சபா செயலாளர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- சேகர் ராஜகோபால், ப்ரம்மகான சபா- ரவி, நாரதகான சபா- ஷங்கர் கிருஷ்ணசாமி, பத்திரிகையாளர்கள் ஹிந்து தமிழ் அரவிந்தன், தீக்கதிர் குமரேசன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன், நாடக உலக ஜாம்பவான்கள் காத்தாடி, MB மூர்த்தி, அகஸ்டோ, தமிழிசைஆத்மநாதன், மற்றும் எத்தனையோ நடிகர்கள், எழுத்தாளர்கள் இரா.முருகன், நாடக எழுத்தாளர்/இயக்குனர் பிரளயன், சின்னத்திரை பிரபலங்கள் DD, கல்யாணமாலை மோகன், மற்றும் அனைத்து நாடக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
அரங்கேறி 35 ஆண்டுகள் ஆன பிறகும் , இன்றும் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் சமகாலத்திய ஒரு நாடகமாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
சமூக ப்ரக்ஞை உள்ள ஒரு படைப்பாளிக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக இதைக் கருதுகிறேன்.
— லலிதா தாரிணி – கோமலின் மகள் மற்றும் இந்த நாடகத்தை இயக்கியவர். ( முகநூல் பதிவிலிருந்து)
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாடகம் இத்தனை அளவிற்குத் துடிப்புடன்இருப்பதற்கு முக்கிய காரணங்கள்:-
கோமலின் மனித நேயக் கதை – மனதைத்தொடும் வசனங்கள். நடிகர்கள் பாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கும் நயம். அந்த அழகான கிராம மேடை அமைப்பு – திறமையான ஒலி,ஒளி அமைப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய – இன்றைய இயக்குனர்கள்.
பங்குபெற்ற அனைவருக்கும் குவிகத்தின் மனமுவந்த பாராட்டுதல்கள்!