தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார்.
இவர் ஏற்கனவே கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைத் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.
இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
வங்கிப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் வண்ணதாசன்.
தமிழின் மூத்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் விருதுக்குப் பெருமை சேர்க்கிறார்.